பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
494


ாலுள்ளிய கண்டல் முள்ளி உரத்தமுண் டகமே' -எனக்காட்டிற்று. முள்ளியின் தளிர் சுருண்டிருக்கும்; தழைத்திருக்கும். இதனையும் குறித்துப் பாடிய கணிமேதையார் முள்ளிக்குக் கண்டல் என்னும் பெயரை அமைத்து, - "... ... ... ... ... முறி (தளிர்) திரிந்த கண்டலந் தண்தில்லை கலந்து கழிதழ்ந்த மிண்டலத் தண்டாழை பிணைந்து'2 - எனப்பாடினார். இதன்கண் தாழையும் உளது. கண்டலும் உளது; இங்கு கண்டல் முள்ளியைக் குறிக்கின்றது; எனவே, கண்டல் முள்ளிக்கும் உரிய பெயராகித் தாழைக்கு மட்டும் உரிமையாகாது நிற்கின்றது. கண்டல்’ என்னும் சொல்லாட்சி பத்துப்பாட்டில் இல்லாமையும் கருதத்தக்கது. பத்துப்பாட்டிற்குப் பின்னர் செய்யுள் வழக்கான சொல். கைதை, கைதல்’ என்றாகியது 'கைதல் சூழ் கழிக் கானல்'8 -எனப் பாடினார் ஞானசம்பந்தர். அடுத்த கேதகை என்னும் சொல் கைதை என்பதன் வட மொழி ஆட்சி. இச்சொல் சங்க இலக்கியங்களில் இல்லாதது. கைதை என்னும் சொல் தாழைப்பொருளில் தாழையைப் போன்றே இலக்கிய வழக்கு கொண்டது. பிற்கால இலக்கியங் களிலும் இடம்பெற்றது. ஆனால், உலக வழக்கில் இல்லாதது. நயமாகக் கூறினால் கையைத் தைக்கும் முள்கொண்டதால் 'கை தை' எனப் பெயர்பெற்றது என்னலாம். கைதவம்’ என்னும் சொல் வஞ்சத்தைக் குறிக்கும். கைதவன் பாண்டியன். இவ்வாறு இருவகைப் பொருளுக்கும் இச்சொல்லமைப்பு பயன்படுவதால் எவ்வடித்தளத்தில் இச்சொல் அமைந்தது எனக்காணல் எளி தாயில்லை. கைதை' என்னுந் சொற்கு வயல்' என்றொரு பொருளையும் பிங்கலம் கூறுகின்றது. எதுவாயினும் தாழைக்குரிய பெயராகிய இவ்வொன்று வேறெம் மலரையும் குறிக்காத பெயராக உளது. எனவே, கைதை தாழைக்குரிய மறுபெயர் எனலாம். 1. ஆடா நி: மரம் 63 : 1 8. ஞான 2 திணை நூ. 61 : 2-4 w