பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495


தாழை என்னும் சொல் இதற்குரிய பெயராக அமைந் துள்ளது. இனித் தாழையின் - அதன் மலரின் கருத்துகளைக் காணலாம், - மலர்களில் மனம் பதித்த புலவர்கள் சிலர் அ பற்றிற்கு வரலாற்றுச் சுருக்கம் போன்று ஒவ்வொரு பாடலை வடிக்கும் பாங்கைக் காண்கின்றோம். கோடலுக்குக் கணிமேதையார் இரண்டு அடிகளில் ஒரு வரலாற்றுச் சுருக்கம் வடித்ததைக் கண் டோம். அவரே கொன்றைக்கும் நான்கு அடிகளில் படைத்தார். உலோச்சனார் புன்னைக்குப் படைத்தார். தாழைக்கும் அவ்வாறு ஒரு வரலாற்றுச் சுருக்கப் பாடல் உளது. இவையெல்லாம் செடியியல் இலக்கியங்கள். நக்கண்ணையார் என்னும் அன்னைப் புலவர் அதனை ஈன்றுள்ளார். ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொன்றை உவமைகாட்டி விளக்கியுள்ளார் "தாழையின் அடிப்பகுதி பருத்தது. சருச்சரை கொண் டது. அச்சருச்சரை செதில்செதிலாக உள்ளமையால் இரால் மீனின் முதுகு போன்றது. இதன் இலை முள்களையுடையது. அதன் அமைப்பு சுறாமீனின் கொம்பு போன்றது. இதன் அரும்பு வெண்மையாக முனை கூரியது. இத்தோற்றம் பெரிய களிற்றின் மருப்பு போன்றது. இவ்வரும்பு முதிர்ந்து தலை சாய்த்து நிற்பது அழகிய மான் தலைசாய்த்துப் பார்ப்பது போன்றது. மலர்ந்து பரவும் மணத்தால் விழாக் களம்போல் கமழ்கின்றது:- இக்கருத்தமைந்த பாடல் இது: 'இறவுப் புறத்தன்ன பினர்படு தடவு முதல்; சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை; பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர் நன்மாண் உழையின் வேறு படத் தோன்றி, விளவுக்களம் கமழும்' -இதனை ஒரு தொகுப்புப் பாடல் எனலாம். இத்தொகுப்பிலும் ஒரு சுருக்கத் தொகுப்பை வெண் கண்ணனார் என்னும் புலவர் தருகின்றார் : 'பேஎய்த் தலைய பினர் அரைத் தாழை எயிறு உடை நெடுந்தோடு'2 ! நற் : 19 : 1-5 2 ●5ü;180:5,6