பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/518

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
498


வெண்சோறு ஏந்தி' (சிதம்பர மும்மணிக்கோவை 5 : 19 ) -என்றெல்லாம் பலகால இலக்கியங்களிலும் சோறாகக் காணலாம். மாறன் பொறையனார் இதனை இழுது -வெண்ணெய் என்றார். தாழையின் தாதுத் தூள் சாம்பல் நிறத்தில் உள்ளது. இருப்பினும் வெண்ணிறம் என்பர். சோற்றுத் திரளை உதறி னால் நிறையத் தாதுத் தூள் கொட்டும். தாழைக்கு இதன் தாதுத்துள் ஒரு சிறப்பு. இத்துள்ள் அதிகம் தோன்றும் ஒன்று. வண்டு மொய்க்கும்போது தொடர்ந்து உதிர்ந்து கொண்டே யிருப்பது மற்றொன்று. இதனைத் 'தாழாது உறைக்கும்" என்றார் நல்லந்துவனார். கோடைக் காற்றடிக்கும்போது அப்பரப்பெல்லாம் பரவும். தன் மணமுள்ளது. இது திருநீறு என்றும் பேசப்பட்டது. தாழை இவ்வாறு நீறு பூசியும் சிவன் தலையில் இடம் பெறவில்லை என்றும், சோறு வழங்கியும் சிறப்புறவில்லை' என்றும் குமரகுருபரர் பாடினார். "வெண்பொடி பூசி இருந்தவ முருற்றியும் யாம்பெறற் கரிய செஞ்சடை' -என்பது, அவர்தம் பாடல். சுதமதி மணிமேகலைக்கு உவவனத்தின் மலர்க்காட்சிகளை விளக்குகின்றாள். நீரில் தாமரை மலர்ந்துள்ளது. நீர்க்கரையில் தாழை பூத்து அதன் தாதுத் துாள் உதிர்கின்றது. அத்துள்ள் தாமரை இதழ்களில் படிந்துள்ளது. இதனைக் காட்டிப் பேசும் சுதமதி, 'விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய கோடுடைத் தாழை கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் கண்ணம் ஆடியது இதுகாண்'2 -என்றாள். இதற்கு மணிமேகலையின் முகத்தை உவமையாக்கிப் பேசினாள்: "நீ தேரோடும் தெரு வழியே வந்தாயன்றோ தேரால் எழுந்த துகள் உன் முகத்தில் படிந்துள்ளது. அதனால், 1 சித.மு. கோவை 5 : 14.18 2 மணி : 4 :16-18