பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/520

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
500


தாழம்பூவின் நன்மணம் சிறப்பிக்கப்பட்டது. இதன் ஆங்கிலப் Guust PRAGRANT SCREWPTNE Sr6örug,j Frgrant = 5 puuessor முள்ள என இது நறுமணத்தாற் பெயர்பெற்றது. தாழை மலரின் மடல் அமைப்பைக் கருதியும், மணம் கருதியும் மகளிரும் ஆடவரும் சூடிக் களித்தனர். நெய்தல் நில மக்களுக்கு இம்மலர் தனி உரிமை. ஒரு தலைவன் இம்மலரைக் கொய்வதற்காகத் தலைவி யைத் துக்கி நின்றான். அவள் பறித்தாள்; சூடினாள். இதனை, 'கைதை தூக்கியும்” என்று மிளைகிழான் நல்வேட் டனார் குறித்தார். மகளிரேயன்றி ஆ. வரும் மடற்றாழை மடல் மலைந்து' மகளிரோடு குலவியதைப் பட்டினப்பாலை கூறுகின்றது. தாழம்பூவின் மனம் மனமகிழ்ச்சிக்கு மட்டுமன்று, மருந் தாகவும் பயன் தருவதாகும். இதன் மனம் ஒரு பூச்சிக்கொல்லி யாகும். அம்மைநோய் கண்ட இல்லத்தில் இம்மலரைக் கட்டித் தொங்கவிடுவதால் அந்நோய் வளர்க்கும் துண்ணுயிரிகள் அழியும். இம்மலரின் மடலிலிருந்து வடிக்கப்படும் பனிநீர் இந்நோய்க்கொரு மருந்து. நூல்களாக எழுதப்பட்ட பனையோலைச் சுவடிகளைப் பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்க இப்பூவின் மணம் பயன்படும். இதன் தாதுத் துளையும் இதற்குத் துாவுவதுண்டு. இம்மலரின் மலர்ச்சிபற்றிய கருத்தொன்றைக் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பர் கூறியுள்ளார்; 'மின்பொருட்டினால் கேதகை மலர்த்திடும்’2 'மின்கண்டு அவர்கின்ற கொந்தனர் கண்டல்'3 -என்பவை அவரது அறிவிப்பு. மலர்கள் பொதுவில் ஒளிக்கு மலரும். தாழையோ பளிச்சிடும் ஒளியாகிய மின்னலுக்கு மலர்வதாகின்றது. இதன் காய் நீள் உருண்டையாகத் தேங்காய் அளவில் உள்ளது. இதனை, "நீர்மலி கரகம்போல் பழந்துரங்கு முடத்தாழை' - என நல்லந்துவனார் நீர்நிறைந்த கலயம் என்றார். இதனைச் சிறு 1 நற் 849 : . * *. ւ : 2 : 3 : 1. 2 *. ւ : 2 : 1 : 7. 4 கவி : 183 : 4,