பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

501


மத்தளம் போன்றது என்றும் கூறுவர். இக்காயை விழாப் பந்தல் களில் ஒப்பனைக்காகக் கட்டித் தொங்க விடுவர். தாழையின் பல உறுப்புகளும் இவ்வாறு இலக்கியங் பாங்கில் உவமிக்கப்பட்டும் உவமையாகிச் சிறப்பனபோன்று இலக்கிய வண்ணனைகளிலும் க ற் பனை க ளி லும் இடம் பெற்றுள்ளன. தாழையின் மலர் நாரைக்கு உவமிக்கப்பட்டதைக் கண்டோம், 'முதுகு வளைந்த இறால் மீன் ஒன்று நாரையின் அலகுப் பிடியிலிருந்து தப்பியது. கடல் நீரில் சேர்ந்து விட்டது. ஒரத்தில் கிடக்கும் அது மணற்கரையில் வளர்ந்துள்ள தாழையைப் பார்க்கின்றது. தாழை மலர் நாரையாகத் தோன்றுகின்றது. அதற்கு அஞ் சி நடுங்கியது -என்று கற்பித்தார் கோட்டியூர் நல்லந்தையார். இதுபோன்று சுவைபயக்கும் கற்பனைகளுக்கும் பயன்பட்டது. புராணக் கதைகளுக்கும் கருவியாயிற்று. காம உணர்வை உருவகமாக்கிக் காமன் என்றொரு சிறு தெய்வத்தைப் படைத்தனர். காம எழுச்சிக்குத் துணைசெய்ய வற்றை அவனது படைக்கருவிகளாக்கினர். 'வஞ்சியர் பெருஞ்சேனை

ைகதை உடைவாள்'? -தாழையின் மடல் ஒளியுடன் நீள மாக ஒரங்களில் கூரிய முள்களைப் பெற்றிருப்பதால் ஈர்த்து அறுக்கும் வாள் ஆயிற்று. இதனாலேயே காமனுக்குக் 'கைதைச் சுரிகை (உடைவாள்)யன்” என்றொரு பெயரை நிகண்டுகள் வகுத்தன. பரஞ்சோதிமுனிவரும்,

'முள் வாய்க் கைதை வாள் எடுப்ப’3 -என்றும் 'காம ஆயுத சாலைகள் போல் கைதை' -என்றும் பாடினார் ஆடவர் தாழைமலரைச் சூடுவதில்லை என்றும், அதற்குச் சிவனின் சாவம் கரணியம் என்றும் கூறும் கதை வழக்குள்ளது. அஃது ஒரு கட்டுக்கதை என்பதை முன்பகுதியில் கண்டோம். சிவன் சூடுவதில்லை என்பதைக் குமரகுருபரரும் பாடினார். 1 தினெ : .211 : 3-7. 8 திருவி. பு: தருமி : 20: 27 2 அறப் சத 91 : 2 - -