பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/522

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
502


புராணக் கதைகள் நிற்க, சாதிப்பாகுபாட்டிலும் தான்ழ் இடம்பெற்றது. சாதிப்பிரிவை மாந்தர்க்குள் மட்டுமோ வகுத் தனர். கல்லிலும் சாதி கண்டவர் பாம்பிலும் சாதி கண்டனர். அதற்குத் தாழையையும் ஒரு சான்றாக்கிக் கொண்டனர். பாம்பு கடித்து நஞ்சு இறங்கிய இடத்தை மோந்து பார்த் தால் அங்கு ஆவின்பாலைக் காய்ச்சிய மணம் வீசுமாயின் அப் பாம்பு அந்தணச் சாதி. நந்தியாவட்ட மலர் மணம் வீசுமாயின் அஃது அரசர் சாதி. தாழைத் தடமலர் வணிகன் நாறும்' அரிதார மணம் வீசினால் வேளாள சாதி. இவ்வாறு திருத்தக்க தேவர் காட்டும் சாதியில் தாழை மனம் வணிக சாதிப் பாம்பாகியது. இக்கருத்து சித்தர் ஆரூட மென்னும் நூற்கருத்தென்று நச்சினார்க்கினியர் காட்டினார். தாழை இவ்வகையில் பாம்பாக மணப்பது ஒரு தாழ்வு போலப் பட்டாலும் தாழையைத் தாழ்ந்து நிற்பதாகக் கொள்ள வேண்டியதில்லை. தாழை என்னும் சொல்லில் தாழ்’ என்னும் முதனிலை நிற்பினும் இம்மலர் தாழாத மலர். வளையாமல் நெளியாமல் தரை நோக்கித்தாழாமல் குத்திட்டு மலர்ந்து நிற்பது. இதனால், "தாழாது உறைக்கும் தடமலர்த் தாழை"2 -எனப்பட்டது. இவ்வடியில், தாழாது என்பது தொடர்ந்து தாதுத் துளைக் கொட்டுவது என்னும் பொருளோடு தாழாதது என்னும் பொருளையும் கொள்ள வைக்கின்றது. இத்தாழாத தாழை மலரின் இதழ் வெண்தோடு, முள் தோடு எனத்தோடாகவும், மடல் தாழை என மடலாகவும் பெயர் பெறும். இவ்விதழ் உள் அடுக்கு அடுக்காகப் போகப் போகச் சிறுத்துப் பலவாக இருப்பதால் இதனைக் கொத்தாகக் கருதி, "வால் இணர் மடற்றாழை'3 -என்றார் உருத்திரங் கண்ணனார். இம்மடல் அகலமாகவும் நீண்டும் விளங்குவதால் இம்மலர், 1 சீவ சி ; 1287 - 8 8 υ - - . பா :1 2 கவி : 181 : 1.0 1. un 18