பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

503


"தடமலர்த் தண்டாழை'1 'தாழைக் தடிமலர்'2 -எனப்பட்டது. இம்மடல் முள்ளுள்ளதாயினும் அம்முள் களையப்படாமலே சூடிக்கொள்ளப்படும். இதன் மணம் நோய் போக்கும். மலர்த் தாது மனத்துள்ளாகப் பயன்படும். மற்றும் தாழை மாந்தர்க்குப் பலவகையில் பயன்படும். இதன் விழுது வீட்டிற்கு வண்ண மடிக்கும் துகிலிகையாகும். இதன் நான் கயிறாகி ஊசலுக்கும் பிறவற்றிற்கும் பயன்படும். ஒலையால் தாழம்பாய் உருவாகும்; தாழங்குடையாகும். இதன் உறுப்புகள் பயன்பட்டாலும் பூவால் தான் இதற்குச் சிறப்பும் மதிப்பும் உள. பூந்தாழை என்னும் உலக வழக்கும் இதற்குச் சான்று. நெறிமடம் கத்தாதை" (பழமொழி: ) 'கடற் புலவு கடிந்த மடற் பூந்தாழை (சிலம்பு : 6 : 166) 'மடற் பூந்தாழையும் (மணிமேகலை : 8 : 9) 一缶丁göT இலக்கியங்களும் பூந்தாழையாகப் பேசும். பூந்தாழை என்றொரு ஊர் தஞ்சை மாவட்டத்தில் உளது. தாழையூற்று, தாழைக்காடு, தாழையூர், தாழந்திருவாயில் எனப் பல ஊர்கள் தாழையால் பெயர் பெற்றுள்ளன. இத்தாழை, "ததர்பிணி அவிழ்ந்த தாழை வன்புதர்' தயங்கிருங் கோடை தாக்கலின் துண்டாது வயங்கிழை மகளிர் வண்டில் தாஅம்'3 -என்றபடி தாழை புதராக வளர்வது. எனவே, இப் பூ, புதர்ப் பூ அஃதாவது நிலப்பூ. நெய்தல் நிலப் பூ. வெண்மை நிறத்தது; இளஞ்செம்மையிலும் பூக்கும். வேனிற் பருவப் பூ. 1 :லி, தொ : 1.31 , 10 3 நற் 299 : 2 2 சீவ. சி : 1287