பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/524

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
504


"தாழை மணக்குதடி கொண்டையிலே தாழாமேவாயேண்டி அண்டையிலே' என்பதொரு நாட்டுப் பாடல். இப்பாடலில் தாழையின் மணம் ஒரு குமரியை அண்டையிலே அழைக்க வைத்தது. இத்தாழையே ஒரு குமரியைத் தழுவி நிற்பதாகும். அவள் குமரி ஞாழல்” 8. குமரி மலர் ஞாழல் குமரி, கன்னி' என்னுஞ் சொற்கள் உயர் திணையில் பெண் பாலுக்குரியவை. இளம் மகளிரைக் குறிப்பவை. அவருள்ளும் திருமணம் பெறாதவர்க்கு உரியவை. உண்மையைச் சொன்னால் உடற் புணர்ச்சி கொள்ளாத மகளிர்க்கே உரியவை. இச்சொற் களை அஃறிணைக்கும் அடைமொழியாக்கிப் பாடினர்; பேசினர். அதற்குத் தொல்காப்பியத்திலும் உரையாசிரியர்கள் இடம் வகுத் தனர். அஃறிணைப் பொருள்களை உயர்த்திக் கூறுவதற்காக அடைமொழியாக்கலாம். அவ்வாறு ஆக்குவது இலக்கணம் அன்று. என்றாலும், 'வழக்கி னாகிய உயர் சொற் கிளவி 1 - என்று கொள்ளப்பட்டது. இவ்வகையில் அடைமொழி பெற்றவை சில. வாழை "குமரி வாழை” எனப்படும். வாழைத் தார்’ என்னும் குழந்தையை ஈனாத நிலையில் இது குமரி. நன்கு தழைத்து முதன் முதலாகப் பூக்கும் இளமையான வாகை “குமரிவாகை' எனப்பட்டது. பயன்படுவதற் காகப் பொதிந்து வைக்கப்பட்டுள்ள அஃதாவது பயன்படாமல் பொதிந்து வைத்துள்ள நெற்கூடு "குமரிக்கூடு” எனப்பட்டது. மற்றோரால் அணுக முடியாத படை - அழியாப் படை 'குமரிப் படை' எனப்பட்டது. இவ்வாறு தாய்மை பெறாமை, தழைத்த இளமை, பயன்படாத பொதிவு, அழியாமை ஆகிய தன்மைகள் கருதிக் "குமரி' என்னும் சொல் அடைமொழியாக்கப்படும். 1 தொல் சொல் : 27 : :