பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

505


இதுபோன்று, கன்னி' என்னும் சொல்லும் பயன்பட்டது. 'கன்னிப் புன்னை என இளமைக்கும், 'கன்னிப் போர்", 'கன்னிப் பேச்சு' என முதல் நிகழ்ச்சிக்கும் கன்னி குறிப்புச் சொல்லாயிற்று. ஞாழல் இவ்விரண்டு அடைமொழிகளையும் பெற்றுள்ளது இம்மரம் செடி நிலையிலிருந்து மரமாகும் பருவத்தில் இதன் தழைத்த தழைகள் பசுமைக் காட்சி வழங்குபவை. இதன் தழைகளைக் கொய்து இளமகளிர் தழையாடையாக உடுப்பர். இப்படியொரு குமரி இதனை உடுத்தி அழகுக் காட்சியளித்ததைக் கண்ட ஒரு தலைவன், 'கானல் ஞாழல் கவின் பெறு தழையள்' - என்றான். இது கொண்டும் இத்தழையின் எழிலை உணரலாம். மேலும் ஒரு முறை கொய்யப்பட்டு மறுபடி அரும்பும் தழை மேலும் அழகு தருவது. இவ்வழகையும் இளமைப் பசுமையையும் கொண்டே சேந்தங்கண்ணனார் என்னும் புலவர், - ... ... ... ... ... தழையோர் 3; a கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்' - எனக் குமரி யாகப் பாடினார். இவர் பெயரை முன்பின்னாகக் கொண்ட கண்ணன் சேந்தனார் என்னும் புலவர், 'கன்னி இளஞாழல்' என்று கன்னி என்றதோடு இளமையையும் இணைத்து மிடுக்கான இளமை யைக் காட்டினார். இதற்கு மெருகு கூட்டுவது போன்று நறுமை’ என்னுஞ் சொல்லையுங் கூட்டி இளங்கோவடிகளார், "கன்னி நறு ஞாழல்' -என்று பாடினார். இக்கன்னி அடைமொழியால் ஞாழல் ஒரு சிறப்பைப் பெற் றுள்ளது. முன்னே கூறிய தொல்காப்பிய உரையாசிரியர் எடுத் தாண்டுள்ளவற்றில் கன்னி' அடைமொழியை இந்த ஞாழலுக்கே சேர்த்துக் கன்னி ஞாழல்' என்பதையே எடுத்துக்காட்டாகக் காட்டினர். அங்கு, குறிக்கப்படுவது உயர்வு கருதி யாகையால் ஞாழல் ஒருவகை உயர்வு பெற்றதாகின்றது. 1 ஐங் :191; 9, g தினை. ஐ 49. 2 நற் : 54 : 9, 10 4. சிலம்பு : f : 9 - 2