பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

இவ்வடைமொழிகளோடு மகளிர்ச் சொல் ஒன்றையும் அடை மொழியாகப் பெற்றுள்ளது. பைஞ்சோலை ஒன்றை வண்ணித் கும் இறையனார் அகப்பொருளின் உரையாசிரியர் எனப்படும் நக்கீரர், "பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து" -என்று பாவையாக்கினார். 'குமரி', 'கன்னி', 'பாவை -என்னும் மூன்று அடை மொழிகளைப் பெற்றமையால் ஞாழல், இளமைச்சிறப்பும் எழிற்பசுமையும் உயர்த்திக் கூறப்படும் பாங்கும் கொண்டதாகின்றது. '... ... ... ... ... திரையுலாப் பரப்பின் ஞாழல்’2 -என்றும், '... ... ... ... ..ஞாழல் தெண் டிரை மணிப்புறம் தைவரும்' -என்றும், எக்கர் ஞாழல்' -என்றும் குறிக்கப்படும். கடற்கரை யில் வளர்வது. மணற்பாங்கில் தழைப்பது. எனவே இது நெய்தல் நிலத்தது. 'ஞாழல் ஓங்கிய” “கருங்கால் ஞாழல்’ சிறியிலைப் பெருஞ்சினை" "கருங்கோட்டு இருங்சினை' கொழுநிழல் ஞாழல்' என்பவற்றால் இம்மரம் ஒரளவில் உயரமானது என்றும், கருமையான அடிமரத்தையும் கருமையான கிளைகளையுமுடையது என்றும், சிறிய இலைகளைக் கொண்டது என்றும், நல்ல நிழல் தருவது என்றும் உணரலாம். இக்கிளைகள் தழைத்து, வளைந்து, கவிந்து தரையில் தவழும் அளவில் தோன்றும். "நீர்க்கான் ஞாழல்' என்பதுகொண்டு நீரிலும் நின்று வளர்வதை அறியலாம். எனவே, ஞாழற் பூ கோட்டுப் பூ. தழையால் குமரியும் கன்னியும் பாவையுமான ஞாழல் தனது பூவால் எத்துணை அடைமொழிகளைப் பெற்றுள்ளது? "நறு வீ ஞாழல்" (நற்றிணை 96 : 1) 1 இறை. அகப் நூற்பா 2 உரை 4 ஐங் : 141 2 மணி : 8 : 5, 6 5 கலி : 56 : 1, 2 3 தற் , 54 9, 10 -