பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/527

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

507

ჭტ† "நறு வீ ஞாழல்’ (குறுந்தொகை : 318:2) "புது வீ ஞாழல்” (குறுந்தொகை : 215 : 6) 'பொன் வீ ஞாழல்’ (அகம் : 70 : 9) - செவ் வி ஞாழல்” (அகம் 249 : 1) சிறுவி ஞாழல்’ (நற்றினை : 315 : (1) -இவைகொண்டு ஞாழற் பூ மணங்கொண்டதையும் புதுமலரின் குறிப்பையும் அதன் நிறத்தையும் அளவையும் காண்கின்றோம். இவற்றுள் இதன் அளவு சிறியது. சிறிய பூ என்பதை விடச் சின்னஞ்சிறிய பூ எனலாம். உள்ளபடி சொன்னால் இது ஒரு பொடிப் பூ. அவ் வளவில் மிகச் சிறியது. எவ்வளவில் சிறியது? 'ஐயவி யன்ன சிறுவி ஞாழல்' என்றார் குன்றியனார். ஐயவி என்னும் வெண்சிறு கடுகு அளவில் சிறியது. மற்றொரு உவமையால் அம்மூவனார் இதனை வழிமொழிகின்றார். “ஆரல் மீனின் முட்டைகளைப்போன்றது ஞாழல் மலர். அம்முட்டைகள் தொகுப்பாக ஒன்று திரண்டிருப்பது போன்று தொகுதியாக உள்ளது. அவை கீழே பூத்துள்ள நெய்தற் பூவின்மேல் உதிரும்.2 அக்காட்சி கடல் நீர்த்துளிகளை ஊதைக் காற்று துாற்றுவது போன்றிருக்கும்” இவ்வுவமையால் ஞாழற் பூவின் பொடி அளவு தெரி கின்றது. மேற்கண்ட அம்மூவனாரது பாடலில் 'சினை மருள் திரள் வீ' என்பதில் 'சினை” என்பதற்குத் தினை என்றொரு பாடம் உளது. இப்பாடத்திற்குத் துணை நிற்கின்றது கபிலரது பாட்டு. அவர் ஒரு கடற்கரைக் காட்சியை வடித்தார். ‘மணல்மேட்டின்மேல் ஒரு ஞாழல் மரம், அதன் மலர்கள் மணற்பரப்பில் உதிர்ந்துள்ளன. நண்டுக் கூட்டம் அவற்றின் மேல் ஒடிச் தம் கால்களால் கோலமிட்டுள்ளன.3 - இத்தோற்றம் காயவைத்துள்ள தினையை அழகிய மகளிர் கையால் துழாவுவது போன்றுள்ளது. -என்று பாடினார். இது கொண்டும் ஞாழற் பூ தினையளவு சிறியது எனக் காணலாம். 1 குறுந் : 56 : 1. 8 தற் : 267 : 2-5, 2 குறுந் , 891 : 1. -