பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/528

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508


மேலே காணப்பட்ட அடைமொழிகளில் "பொன் வி ஞாழல்' என்பதும் செவ் வீ ஞாழல்’ என்பதும் அதன் நிறத்தைக் காட்டு கின்றன. பொன் இங்கு செம்பொன் போலும். 'செவ் வி” என்ற படி இதன் நிறம் சிவப்பு. தினையரிசி உவமையாக்கப்பட்டதற் கொப்ப அதன் செம்மை நிறத்தது என்னலாம். காமவேளின் இளவல் சாமவேள் நிறத்தை இப்பூவிற்கு நல்லந்துவனார் உவமையாக்கி ' நிறங் கிளர்பு களுவிய ஞாழல்' என்றார். ஆம், ஞாழிற்து செம்மை நிறத்தில் தொகுப்பாகத் தோன்றுவதால் நிறம் கிளர்ந்து விளங்குவது தனிப் பூவின் அளவையும் நிறத்தையும் கண்டோம். இப் பொடிப்பூ தொகுதியாக திரண்டிருப்பதைச் சினைமருள் திரள் வி' என்னும் தொடர் சுட்டுகின்றது. இவ்வாறு பலபூக்கள் திரண்டு ஒரு கொத்தாக உள்ளமையால் 'பொன் இணர் ஞாழல் (ஐங்குறு : 169 : 2) குவி இணர் ஞாழல்’ (பதிற்றுப்பத்து : 51 : 5) எனப் பட்டது. அக்கொத்தும் பலவாக ஒருங்கு திரண்டு தழைத்திருப் பதால் "இணர் ததை ஞாழல்’ எனப்பட்டது. (பதிற்றுப் பத்து : 30 : 1) இவற்றையெல்லாம் ஒருங்கு நோக்க, ஞாழிற் பூ - ஐயவி அன்ன சிறியது: செம்மை நிறத்தது: தொகுதியாகத் திரண்ட கொத்துப் பூ; மணமுள்ளது; நிறையப் பூப்பது -என்றாகின்றது. மேலுள்ள தொடர்களை மேலும் ஒரு நோட்டமிட்டால் ஒரு சொல்லே மீண்டும் மீண்டும் அமைந்துள்ளது தென்படும். அது தான் "வி" என்னும் சொல். ஆம், ஞாழல் குறிக்கப்படும் இடங் களில் எல்லாம் "வீ ஞாழல்' என்றே குறிக்கப்படுவது கொண்டு இப்பூ விரைவில் உதிர்ந்துவிடுவது என்பதை உணரலாம். - இப் பூ பொடிப் பூவாயினும், தொகுதியாகக் குவிந்திருப்ப தாலும் நிறம் கிளர்ந்து விளங்குவதாலும் சூடிக்கொள்ளப்பட்டது. கபிலர், 'மணம் கமழ் நறு வீ' என்றபடி கமழும் மணமும் மகளிரை 1. கலி 26 : 4,