பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/529

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

509


யும் ஆடவரையும் சூடிக்கொள்ளத் தூண்டும். கடற்கரையில் கன்னி ஒருத்தி, 'கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி' நின்றதைக் கண்டு மயங்கிக் கலங்கினான் ஒரு காளை என்றார் இளங்கோ வடிகளார். ஞாழற் பூங்கொத்தைக் கொய்து சூட நின்றவள் போலும் அவள். மற்றொருத்தி ஞாழலின் முதிர்ந்த பூங்கொத்தைக் கொய்து கூந்தலில் கலந்து செருகி முடித்துக்கொண்டதை நல்லந்துவனார். "... . . . . ஞாழல் முதிர் இணர் கொண்டு கழும முடித்து ... ... ... ஈங்கே வருவாள்'2 - என்று தலைவனைப் பேச வைத்தார். இவைகொண்டு மகளிர் ஞாழற் பூவை சூடியதை அறியலாம். ஆடவரும், € g - - - ... ... ... ஞாழல் வண்டுபடத் ததைந்த கண்ணி' - யராக விளங்கினர், தலையிற் சூடியது மட்டுமன்றி, நீலத்தையும் நெய்தல் பூவையும் இதனுடன் சேர்த்து மாலையாகக் கட்டி மார்பில் அணிந்தனர். ஞாழலின் பெயர்களை நிகண்டுகள் குழப்பியுள்ளன. 'பலினி' என்றொரு பெயரைமட்டும் சூடாமணி நிகண்டு குறித்தது. பிங்கல நிகண்டு பலினியுடன் "நாகம்' என்னும் பெயரையும் கூட்டிக் கொண்டது. சேந்தன் திவாகரமோ பலினியை விட்டது. "நறவம் சுள்ளி நாகம் ஞாழல்' -என நறவம்', 'சுள்ளி' என்னும் இரண்டையும் சேர்த்துக் கொண்டது. இச் சேந்தன் திவாகரமே. 'நறவம் சுள்ளி அருப்ப்லம் அனிச்சம்' - என அனிச் சத்திற்கும் இவ்விரு பெயர்களையும் குறித்துள்ளது. இவற்றுள் நறவம் என்பது கொடி. ஞாழல் மரம். எனவே பொருந்தாது. சுள்ளி அனிச்சத்தோடு ஆராயவேண்டியது. அவ்வாய்வால் ஞாழலுக்குப் பொருந்தாமை புலப்படும். - 1 சிலம்பு : 7 : 9 : 2 8 அகம் : 870 :10, 2 கலி ; 56 , 2, 8.