பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


மதுரையில் வங்கிய சூடாமணி மாறன் என்னும் மன்னன் சிவபெருமான் வழிபாட்டிற்காக ஒரு பூஞ்சோலையை அமைத்தான். அதில் சண்பக மரங்களை அதிகமாக வைத்தான். அப்பூவைச் சார்த்திச் சிவனுக்குச் சண்பகசுந்தரர்என்று பெயரமைத்துத்தானும் சண்பகமாறன் எனப்பட்டான். ஊர்களில் பூங்காக்களை அமைத்தமை மட்டுமன்றி வீடு களிலும் பூங்காக்களை வளர்க்கும் பழக்கம் எழுந்தது. மேலை நாடு களில் வீட்டு முகப்பில் அழகிய பூக்களைப் பூக்கும் சிறு சிறு பூஞ் செடிகளை எழில் கருதி அமைத்தனர். நமது பரந்துபட்ட நாட்டிலும் இப்பழக்கம் இருந்தது. "வாடாமல்லிகைச் செடி சூழ்ந்த மாதவிக்கொடி வீடும், அதன் அண்டையில் அசையும் தளிரோடு சிவப் பான அசோக மரமும், பேரழகுள்ள கேசய மலரும் பொருந்தியுள்ள எனது காதலியின் வீடு'85 -என்று மேக தூதத்தில் வீட்டு முகப்பு குறிக்கப்படுகின்றது. - - தமிழ் இலக்கியங்களிலும் இல்லத்து முகப்பில் இவ்வகை அழகு அமைக்கப்பட்டிருந்ததைக் காண்கின்றோம். வீட்டு முகப் பில் நொச்சி மரம் வைத்து வளர்க்கப்படுவதும், அதில் மாதவிக் கொடி படருமாறு வளர்க்கப்படுவதும் உண்டு. முற்றத்தில் முல்லைக்கொடி வளர்க்கப்படும். இல்லத்து முகப்பு இவ்வாறு அழகு செய்யப்பட்டமை போன்று இல்லத்தின் உள்ளிடமும் மலர்களால் ஒப்பனை செய்யப் படும் பழக்கம் கி. மு. விலேயே மேலை நாடுகளில் திகழ்ந்தது. கி. பி. முதற் நூற்றாண்டளவில் ஒரு மன்னன் நாட்டு மக்களுக்கு ஒர் ஆணை பிறப்பித்தான். ஒவ்வொரு இல்லமும் மலர்க்கொத்துகளாலும் மலர்க் கோவைகளாலும் நாள்தோறும் ஒப்பனை செய்யப்பட்டு விளங்கவேண்டும்’-என்பது அவ்வாணை. இவ்வாணையிட்ட்வனது குணத்தன்மையை நோக்கினால் ஒரு வியப்பு தோன்றும். அவன் அத்தகைய குணக்கேடன். 85. மே, தூ: பாகம் 2: செய்யுள் :16 崇2