பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/532

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
512


கபிலரது குறிஞ்சிப் பாட்டின்படி சுள்ளி ஒரு வகைப் பூ, மராஅம் வேறுவகைப்பூ நச்சர் எழுதிக்காட்டியுள்ள மராஅமும் மரவமும் ஒன்றே. பத்துப் பாட்டில் மராஅம் எட்டிடங்களில் வந்துள்ளது. அவற்றுள் ஐந்திடங்களில் மராமரம் என்றும் மரவம் என்றும் நச்சரே பொருள் எழுதியுள்ளார். சிறுபாணாற்றுப் படையில் கடம்பு’ என்று எழுதினார். திருமுருகாற்றுப்படையில் செங்கடம்பு என்று எழுதினார். அதற்கும் வெண்கடம்பு’ என் றொரு பாடம் உளது. கலித்தொகையில் இரண்டிடங்களில் மராஅம் உளது ஒரிடத்தில் வெண்கடம்பு என்றும் மற்றோரிடத் தில் மராமரம் என்றும் நச்சரே எழுதியுள்ளார். எனவே, நச்சரது உரைகளே மராஅமும் மரவமும் ஒன்றே என்று காட்டுகின்றன. அவரே சுள்ளியையும் மராமரம் என்று எழுதியுள்ளமையால் ஒரே வகைப்பூவை இரண்டிடங்களில் காட்டியதாகின்றது. ஒரேபாட்டில் அடுத்தடுத்து அமையும் பூக்களில் கூறியது கூறலைக் கபிலர் செய்தார் என்றால் அது பெருந்தவறு மேலும் பரிபாடலில் பரிமேலழகரும், "மராமலர்த் தார்' என்பதில் மராம் - வென்கடம்பு எனப் பொருள் காட்டியுள்ளார். எனவே, நச்சர் சுள்ளிக்கும் மராமரம்’ என்று பொருள் கொண்டதால் ஒரு குழப்பத்தைத் தந்தவராகின்றார். இவ்வோர்டத்தில் உள்ள மாறுபாடன்றி வேறெவ்விடத்தும் மராஅம் பற்றிக் குழப்பம் இல்லை. "இந்துளம் மிரா கதம்பம் இயைந்த நிபம் கடம்பாம்’ -எனக் கடம்பிற்குக் கூறப்பட்ட பெயர்களில் மராம் தவிரப் பிற சொற்கள் வடசொற்கள். இவற்றில் எச்சொல்லும் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை. இது பிற்கால அமைப்பு சேந்தன் திவாகரம், "மரா வெண்கடம்பின் பெயரா கும்மே” என்றது, இலக்கிய ஆட்சியில் பெரும்பாலான இடங்களில் அமைப்பிற்குப் பொருந்துவதாகும் பொதுவில் இம் மர்த்தை மரவம், மராஅம் என்று குறிப்பிடும் இடங்களிலும் வெண்கடம்பையே குறிக்கும். சிலம்பில் மரவம் என்பதற்கு அடியார்க்கு நல்லார் வெண்கடம்பு’ 1 யரி , 15 ; 20 2 குடா நி : மரம் : 25 : 2