பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516


இவற்றால் இம்மலரின் வெண்மைநிறம் சிறப்பிக்கப்பட்டது. இவ்வெண்மை மலர்களின் தொகுப்பாகிய கொத்து உருண்டு திரண்டு 'வெண்கடம்பு பந்தணிந்தவே" 1 எனத் திருத்தக்க தேவர் வண்ணித்தாங்கு வெண்பந்து போன்று காட்சியளிக்கும். இப்பந்துத் தொகுப்பும் மலர்கள் ஒழுங் கில்லாத தொகுப்பன்று. மலர்வரிசை முறுக்கிய புரி அமைப்புடை யது. இப்புரியும் பந்து வடிவிற்கமைய மேலே சுரிந்து வரும். இந்நிலையைப் புரியினர்’ என்றும் மராஅத்து வால் இணர்ச் சுரிமலர்' என்றும் புரிந்தும் கரிந்தும் அமைந்தமை பாடம் பட்டது. இப்புரிவும் சுரிவும் வலப்புறமானவை என்பதை, 'வலம்புரி மராஅத்து' (குறு : 22) 'வலஞ்சுரி வாலினர்' (ஐங் : 383) —5rমাষ্ট্র குறித்தன. இவைபோன்றே பல இடங்களிலும் இவ்வாறு வலமாகச் சுரிந்திருக்கும் அமைப்பு பாடப்பட்டுள்ளது. இவ்வெண்கடம்பு மலைப்பகுதியிலும் சுரத்திலும் வளரும். இது பூத்துக் குலுங்கும் போது மலையே அழகு பெற்று விளங் கும் என்பதைச் சேரமான், எந்தை என்னும் சேரமன்னன், 'சிலம்பணி கொண்ட வலம்புரி மராஅத்து 3 -என்றார். ம்லையிடமாகக் குறிக்கப்படுவது நிறைந்த குறிஞ்சி நிலத்தைக் குறிப்பது அன்று. 'பாலை நின்ற பாலை நெடுவழிச் சுரன்முதல் மராஅத்த' (சிறுபாண் :11, 12.) 'வ்லங்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புது வி’ (அகம் : 83 :1) 'நீரில் நீளிடை செங்கால் மராஅத்து' (நற் : 148 : 6, 7) "சுரன் மராஅத்த” - என இம்மரம் பாலைநிலத்தில் உள்ளமை குறிக்கப்படும். பாலை வழியில் அயலில் இது வளர்வதை நெறியியல் மராஅத்த" 1.சிவ.சி. 1650 3 குறித்தொகை 224 8. 2. யாப், வி : 44.மேற், ... --