பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

517


(குறுந் , 92) 'நெறியயல் மராஅம்" (அகம் : 121 : 8) என்பனt கொண்டும் அறிய முடிகின்றது. மேலும் இவ்வெண்கடம்பு பேசப் படும் பாடல்கள் பாலைத் திணைக்குரியனவாக உள்ளன. உடன் போக்கு மேற்கொண்டு சென்றோர். இதன் இலை உதிர்ந்த நிழலில் தங்கியதையும் இதன் பூவைத் தலைவன் தலை விக்கு வழங்கியதையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இமை யாவற்றாலும் வெண்கடப்ப மலர் பாலைநில ഥ്. அதிலும் குறிஞ்சி திரிந்தபாலை நில மலர். இம்மலர்க்குரிய பருவம் இளவேனிற் பருவம். இதனை, ... ... .... ... காமர் வேனில் வெயிலவிர் புரையும் வீததை மராஅம் (அகம் , 317 : 14, - 15.) 'தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை வேனில் ஒரினர்" (குறுந் : 211 : 4) "... - வலம்புரி மராஅத்து வேனில் அஞ்சினை கமழும் ....” (குறுந் : 22 : 3, 4) "வேனில் பூத்த மராங் கோதை’ (ஞான. தே நகை) -எனப் பல இலக்கியங்களும் காட்டுகின்றன. இப் பூ மணம் கமழ்வது. "... ... ... ... மராஅத்து w வேனில் அஞ்சினை கமழும்” (குறுந் : 22 : 3, 4) 'வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவி’ (அகம் : 88 : 1) -என்றெல்லாம் இதன் மணம் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மனைத் தால் பாலைவனமே மணம் கமழுமாம். தேனுடன் இம்மலர் விரியும். ஆனால், வெப்பத்தால் காய்ந்த மரத்தில் உள்ள பூ தேன் அற்றதாகும். இக்காலத்தில் தேன்கருதி இம்மலரை ஊதிய தும்பி தேனின்றி ஏமாந்து பெயர்ந்ததைக் காவல் முல்லைப் பூதனார் (குறுந் : 21 f : 4, 5) பாடியுள்ளார். வெண் மை நிறமும் கொத்துமாகிய இப்பூ மகளிராலும் ஆடவராலும் சூடப்பட்டது. தலைவன் தலைவிக்குக் கையுறை யாக இப்பூவை வழங்கினான். அவள் இதனுடன் தழைகளைத்