பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/540

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
520


டக்கியே 'மராஅம்" பட்டியலிடப்பட்டுள்ளது. அப்பொதுப் பெயரால் மட்டுமன்றிப் பெரும்பாலான இடங்களில் செங்கடம்பை: குறிக்கக் கடம்பு என்னும் பெயரே கொள்ளப்பட்டுள்ளதால் கடம்புப் பெயரில் செங்கடம்பைக் காண நேர்கின்றது. -- மரத்தளவில் இரண்டிற்கும் பெரும் வேறுபாடில்லை. வெண்கடம்பு போன்றதே செங்கடம்பும். இரண்டும் இலையுதிர் மரங்களே. ஆயினும், இக் கடம்பின் இலைகள் நன்கு தழைத்துச் செறிந்து வளரும். மரத்தைச் சுற்றிலும் பரவித்தாழ்ந்து கவிழ்ந்தும் தழைப்பதால் அடிமரப்பகுதி இருட்டாகத் தோன்றுவதை, 'இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து’ -என்றார் நக்கீரர். கபிலர் திணிநிலைக் கடம்பு' என்றதற்கேற்ப இம் மரம் உறுதி வாய்ந்தது. இவ்வுறுதியைச் செறிந்த தன்மையை உடைய கடம்பு’ என்னும் பொருளமைத்து நத்தத்தனார் "துறு நீர்க் கடம்பு’ என்றவர், 'நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பின் -என இம்மரம் உயர்ந்து வளர் வதையும் பொய்கைக் கரையில் இடம் பெறுவதையும் குறித்துள் ளார். பொய்கைக் கரையில் வளர்வதாயினும் இம்மரம் பலைப் பாங்கில் இடம்பெற்றது. எனவே குறிஞ்சி நில மரம். எனவே, செங்கடப்பம் பூ குறிஞ்சி நிலப் பூ. இப் பூ 'இணர்க் கடம்பு" என்னும்படி கொத்தாகப் பூக்கும். அக்கொத்தும் உருண்டு திரண்டிருக்கும். ஒழுங்கு வட்டமாக, அமைந்த இதன் அரும்புகள் யாவும் ஒரே நேரத்தில் மலர்ந்து தோன்றும். இவ்வாறு ஒரே நேரத்தில் மலரும் இதனை வைத்து ஒரே நேரத்தில் பல கருத்துக்களை வெளியிடும் ஒரு தருக்க முறைபெயர் பெற்றது. அதற்குக் கடம்பகோரக நியாயம் என்று பெயர். கோரகம்என்றால் இளம் அரும்பு என்று பொருள். கடம்பின் இளம் அரும்பு ஒரே நேரத்தில் மலர்வதுபோன்று ஒரே நேரத்தில் பல கருத்துகளை மலர்த்தல் என்று இத்தொடருக்குப் பொருள். - 1 திருமுருகு ; 10, 2 சிறுபாண் : 69, 70,