பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/541

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
521


இம்மலர் சிறிய அளவில் மஞ்சள் பாவிய செம்மை நிறங் கொண்டது. "எரிகான் றன்ன பூஞ்சினை மராஅம்' - என இதன் நிறம் நெருப்பின் நாக்களவு நிறங்கொண்டது. இந்நிறத்தையே "வண்ணக் கடம்பின் நறுமலர்'2 என்றார்.உருத்திரங்கண்ணனார். இம்மலர்க்கொத்தின் வடிவத்தையும் நிறத்தையும் கொண்டு குறும்பூழ்ப் பறவையின் குஞ்சிற்கு உவமையாக்கினார். இப்பூங்கொத்து ஒவ்வொன்றும் உருண்டு சிறு எலுமிச்சம் பழ அளவில் இருக்கும். இக்கொத்துகள் தொடர்ந்து பூத்து ஒரு கோதை மாலை போன்று தொங்கும். கொன்றையும் கோதையாகப் பூப்பதை முன்னே கண்டோம். இவ்வாறு கோதையாகப்பூப்பதை, "... கடம்பின் துணையார் கோதை" (சிறுபாண் : 69). என்று கூறும் அடிக்கு நச்சினார்க்கினியர், "கோதை போலப் பூத்தலின் கோதை என்றார்" -எனப் பொருள் எழுதினார். இவ்வமைப்பில் இக்கொத்துக்கள் தொடர்ந்து ஒரு தொடையல் போல் பூப்பதைத்தொல்காப்பிய உரைப் பேராசிரியர் செந்தொடைக்கு உவமையாக்கி, "செந்தொடையும், செய்யுட் பொலிவு செய்யுங்காற் கொன்றையுங் கடம்பும் போல நின்றவாறே நின்று தொடைப் பொலிவு செய்யும் என்பதாம்'3 -என விரித்தார் உருள் வடிவப் பூங்கொத்துகள் இவ்வாறு தொடர்ந்து கோவையாகத் தோன்றுவதை மகளிர் கைகோத்திருப்பதற்கு உவமையாக்கினர். மகளிர் கைகளைக் கோத்துப் பிடித்துக் கொண்டு பிடிவிடாமல் ஒடி நீரில் பாய்ந்து நீராடுவர். இதனைக், கபிலர், 'திணிநிலைக் கடம்பின் திரளரை வளைஇய துணையறை மாலையில் கைபினி விடேஎம் துரையுடைக் கலுழி பாய்தல்”* - - என்று பாடியுள்ளார். திருத்தக்க தேவரும், 1. மலை : 498, 8 தொல். செய்யுளியல் , 94 உரை 2 பெரும்பாண் : 208, 204. 4 குறி. பா : 176-178,