பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524


இம்மலரைச் சூடுவதாலேயே முருகனுக்குக் கடம்பன் என்றொரு பெயர் அமைந்தது. இப்பெயர், பூவால்தான் அமைந்தது என்பதைப் "பூக்கும் கடம்பா' என்னும் தொடரும் காட்டும். பூவைச் சூடுவதோடு முருகன் கடம்ப மரத்தில் இடம் பெறுவதாக கொண்டனர். இதனால் கடம்பமர் நெடுவேள்: (பெரும்பாண் :75) என்றெல்லாம் -பாடப்பட்டான். இங்கு "அமர்தல்' என்பது விரும்புவதையும் இடம் பெறுதலையும் குறிக்கும். திருமுருகாற்றுப்படை, - 'சதுக்கமும் சந்தியும் புதுப் பூங் கடம்பும்' முருகன் இடம் பெறும் இடங்களாகக் குறிப்பதாலும் 'அமர்தல்' இங்கு பெரும் பகுதி இடம்பெறும் பொருளையே தருவதாகும். இதுபோன்றே இக்கடம்பு திருமால் இடம்பெறும் செய்தி யையும் பரிபாடல், 'ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும் அ வ்வவை மேய வேறு வேறு பெயரோய்' எனக் குறிக் கின்றது. 'ஆலமரத்தையும் கடம்பமரத்தையும் ஆண்டுறையும் தெய்வங்கட்கு மகிழ்ச்சியுண்டாகவேண்டி அணிதலைச் செய்தற்கு விலங்க இட்டுவைத்த மாலைகள் போலே கொம்புகடோறுந் தூங்கா நிற்கும்’ -என்றெழுதி முருகனும் திருமாலும் தங்குமிடம் கடம்பு என்னும் குறிப்பையும் வைத்தார். இக்கடம்பமாலை முருகனுக்கு உரியதாகையால் முருகனை முன்னிட்டு வெறியாடும் வேலன் இம்மாலையை அணிந்தும் ಖTಶ குடியும் ஆடுவான். இம்மலரைப் பனந்தோட்டுடன் சேர்த்துக் கட்டியும் வேலன் வெறியாடுவதை வெறிபாடிய காமக் கணியார் என்னும் பெண்பாற் புலவர், -- பரி : 4 : 67, 69,