பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/545

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
525


"வெண்போழ் (பனந்தோடு) கடம்புடன் சூடி . ... ... ... ... ... வேலன் வெறியயர் வியன்களம்" எனப் பாடினார். இக்கடம்பு மற்றொரு முத்திரை கொண்டதுமாகும். ஒருவகைக் குடிமக்கட்கு இதன் பெயர் அமைந்தது. 'துடியன் பாணன் பறையன் கடம் னென் றின்னான் கல்லது குடியு சில்லை' - என்னும் மாங்குடி மருதனார் புறப்பாட்டு இவ்வாறு ஒரு குடிப்பெயரை அறிவிக் கின்றது. இத்துடன் கூறப்படும் மற்றைய மூன்று குடிப்பெயர் களும் அவரவர் செய்த தொழில்களாகிய துடி முழக்குதல், பண்ணிசைத்தல், பறையடித்தல் என்பவற்றால் உண்டானவை. இத்தொடர்பில் நோக்கினால் கடம்பமாலை அணிந்து வெறியாடும் தொழில் புரிந்தோர் இப்பெயர் பெற்றவராகலாம். ஆனால் மற்றொரு மக்கட்கூட்டம் இப்பெயரில் வாழ்ந்துள்ளமை இங்கு நோக்கத்தக்கது. "يتي மேலைக் கடற்கரைப்பகுதியில் கூவகத் தீவு என்றொன்று உண்டு. இதனைத் தலைநகராகக்கொண்டு கடம்பர்’ என்றொரு இனத்தார் வாழ்ந்தனர். அப்பகுதிகளில் கடம்பந் தீவு’ என்பதும் ஒன்று. இக்கடம்பர்களது மன்னன் தனக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தை கொண்டிருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இத்தீவின்மேல் படை யெடுத்துச் சென்றான். அங்கிருந்த காவல் மரமாகிய கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி வென்றன். இதனால் அவன் 'கடற் கடம்பெறிந்த காவலன்' (சிலம்பு : 23 : 81) எனப் பட்டான். இவ்வரலாற்றுச் செய்தியைக் குமட்டுர் கண்ணனார் பதிற்றுப் பத்தில் ஈரிடத்திலும் (பதிற்றுப்பத்து : 1.1 , 20.) மாமூல னார் அகத்திலும் (127) பாடியுளர். . 1 அகம் : 98 : 16-18. 2 புறம் : 885 : 7, 8.