பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/546

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
526


இவைகொண்டு கடம்ப மரத்தால் பெயர்பெற்ற நிலப்பகுதி வில் வாழ்ந்த இனத்தார் கடம்பர் எனப்பட்டமை அறியப் படுகின்றது. இக்குடியினர் மிகப் பழங்குடியினர். இவ்வினத் தாரைச் சேர்ந்தோர் தமிழக உட்பகுதியிலும் வாழ்ந்தனர் இவரையே மாங்குடி மருதனார் புறத்தில் குறித்துள்ளார் எனல் பொருந்தும். இக்கடற்கரைத் தீவுப் பகுதியில் இடம்பெற்ற கடம்புதான் மூலத்தில் அமைந்தது போலும். தமிழகத்து உட்பகுதியில் மலையிடத்தில் கடம்பு இடம் பெற்றதால் குறிஞ்சி நில மரமாகக் கொண்டாலும் மிகுதியும் தொன்மையும் கருதி இது கடற்பகுதி மரமாகக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. இவ்வாய்ப்புைக் கொண்டே இதற்குக் கடற்பகுதி இந்திய ஒக் மரம் - SEASIDE INDIAN 0.A.K என்னும் ஆங்கிலப்பெயர் அமைத்தது. .. எவ்வாறாயினும் கடம்பினால் ஒரு நிலம் பெயர் பெற்றது: ஒர் இனத்தவர் பெயர்பெற்றனர் என்பன உண்மை. மதுர்ைக்குக் "கடம்பவனம்’ என்றொரு பெயர் உண்டு. மேலும் கடம்பூர்; கடம்பலூர், கடம்பங்குடி எனப்பல ஊர்கள் பெயர்பெற்றுள்ளன: இத்தகைய கடம்பு அழகிய கடப்பம் பூவைப் பூத்தது மட்டு மன்று. புகழும் பூத்த மரமாம். அதிலும் எத்தகைய புகழ் பூத்தது? "புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு" -என்பதாக நப்பண்ணனார் பாடினார். புலத்தால் - அறிவால் எல்லை அறிய இயலாத புகழ் எனப்பட்டமை இதற்கொரு நல்லிடம் அமைந்தது. இவ்வாறு நல்லிடம் பெறும் கடப்ப மலரின் வரலாற்றுக் குறிப்பு: • . . . . . - கடம்பு என்பது செங்கடம்பைக் குறிப்பது. குறிஞ்சி நிலத்துக் கார்கால மலர். நற்சிவப்பு நிறங் கொண்டது. கொத்தாகப் பூக்கும். அக்கொத்தும் தொடர்ந்து கோதைமாலை போலத் தோன்றும். இதன் தாது செம்மை நிறத்தது. முருகனுக் குரிய மலர். இப்பூவாலும் மரத்தாலும் ஒரு குடியும் ஊர்களும் பெயர் பெற்றன -- - - -5T53]." அமைகின்றது o