பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

527


பொதுவில் குறித்தால், மராஅம், மரவம் எனும் பெயர்கொண்ட இவ்வினம் வெண்மையும் செம்மையுமாக இருவகையது. மராஅம் பொதுப் பெயராயினும் மிகப் பெருமளவில் வெண்கடம்பையே குறிக்கும். கடம்பு என்பது செங்கடம்பைக் குறிக்கும். வெண்கடம்பும் செங் கடம்பும் ஒரினமாயினும் வடிவத்தால் சிறிதளவு மாற்றங்கொண் டவை. இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படுபவை. இரண்டிலும் செங்கடம்பு முருகனுக்குரியதாகக் கொள்ளப் பட்டதன் தொடர்போடு திருமாலுக்கு நிறத்தொடர்பில் கொள்ளப் பட்ட பூவை நோக்கினால் நம் முன் வந்து தோன்றுவது காயா என்னும் பூவைப் பூ. 'க' வை அடுத்துக் 'கா' வருவது போன்று கடம்பை அடுத்துக் காயாவைக் காணலாம். 10 மணி மலர். ά[III]Π, மணிமிடை பவளம் அகநானூற்றைத் தொகுத்தவர் அதனை மூன்று பிரிவாக வகுத்தார். அவற்றிற்கு முறையே களிற்றியானை நிரை, 'மணிமிடை பவளம்', நித்திலக் கோவை எனப் பொருள் தழுவிய பெயர் சூட்டினார். இவை மூன்றனுள் 'மணிமிடை .பவளம்’ என்னும் ஒன்றே இலக்கிய ஆட்சியுடைய தொடர். அதிலும் அகநானூற்றிலேயே இடைக்காடனாரால் உருவாக்கப் பட்ட தொடர். ஆனால் இத்தொடர், 'மணிமிடை பவளம்" என்னும் தலைப்பைக்கொண்ட பகுதியில் இல்லை. அடுத்த நித்திலக் கோவைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. இவ்வகையில் 'மணிமிடை பவளம்' என்னும் தொடர் ஒரு குறிப்பிற்கு உரியதாகின்றது. இத்தொடர்க்கு ஒன்பான் மணிகளில் 'நீலமணி நெருங்கிய பவளம் என்று பொருள். இந் நீலமணிப் பவளத்தை நாம்