பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530


'காயாங் குன்றத்து' (நற் : 371 : 1) "நார்மலர்ப் பூவை’ (பரி : 1.3 - 42) 'கார்பயந் திறுத்தென மணிமருள் பூவை அணிமலர்” (அகம் : 134 : 2, 3) "புல்லென் காயா பூக்கெழு பெருஞ்சினை' (குறுந் : 183 : 5.) மரிையெனப் பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கழலக் கார்தொடங் கின்றே காலை' (நற் : 242 : 3–5} 'கருநனைக் காயா கனமயில் அவிழவும்' 'கலவ மாமயில் எருத்தின் கடிமலர் - அவிழ்ந்தன காயா (சிவ. சி : 1558) 'களிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு (அகம் :133:8) "பன்மலர்க் காயா (குறி. பா : 70) - "மென்மலர்க் காயாவும்’ (கலி : 193 : 1) 'நாற்றமும் மென்மையும் பூவை உள' (பரி : 4 : 29) காயாபற்றிய இவைகளெல்லாம் அதன் தன்மைகளே. அதற். கென்று தனிச் சிற்ப்பிருக்குமானால் அச்சிறப்பு அதன் நிறத்தால் வருவதாகும். நீல நிறப்பூக்கள் பல. அவை "மணி' என்னும் அடைமொழியுடன் கூறப்படும். சில: "மணி நிலம் (பரி : 1.1 : 41) மணிமருள் நெய்தல்' (ம. கா : 282) “மணிமருள் மா முள்ளி’ (அகம் : 236 : 1) 'மணிதுணர்ந் தன்ன நொச்சி’ (புறம் : 272 : 1) 'மணிப் பூங் கருவிளை' (கு. பா : 68) 'மணிப்பூ அவரை' (ம. கா : 292) “மணிக் குருக்கத்தி" (பெருங் இலா 15 : 195) இவ்வாறு பட்டியல் நீலரினும் ‘மணிமருள் பூவை' (அகம் : 286 : 1) "மணிக் காயா' (பொருந் : 291) -எனப் 'பூவை என்னும் காயா மணி நிறத்தின் நல்ல கரு நீலத்திற்கு எடுத்துக்காட்டாவது. இதனைக் கருமை என்பதி இலக்கிய வழக்கு. இதன் அழுத்தமான கருநீல நிறத்தையே திருமாலுக்கு உவமையாக்கினர். .