பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

531


"... ... ... ... பூவை விரிமலர் புரையும் மேனியை" (பரி ; 1 : 6, 7) 'பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம்” (நான். க : 1) "பூவைப் பூவண்ணன் அடி" (திரி : 2 : 4) காயமலர் நிறவா" (பெரி. திரு 1 : 5, 6) 'காயாம்பூ வண்ணன்' (கூர். பு : இரா : 4) என்னும் இவை ஒரு சில இவற்றுள் காணப்படும் காலஅளவுகொண்டுநோக்கின் சங்க இலக்கியங்களில் திருமால் 'பூவை என்னும் பெயரால் குறிக்கப் படுவதை அறியலாம். இச்சொல் கொண்டே தொல்காப்பியத்தில் இதற்கு ஒர் இலக்கணத்துறை அமைந்தது. அதற்குப் 'பூவை நிலை' -என்று பெயர். அதனையும் புகழ்ச்சியாக " தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்"1 -என்றார் தொல்காப்பியர். இதற்கு உரைவகுத்த இளம்பூரணர், 'பூவை மலர்ச்சியைக் கண்டு, மாயோன் நிறந்தை ஒத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதவின் அக் காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல். உன்னங் கண்டு கூறினார் போல இதுவும் ஒரு வழக்கு” - என்று இதனை ஒரு வழக்காகக் குறித்தார். இதன் நிறமே இதற்குப் புகழும் போற்றியைத் தந்தது. திருமாலுக்குவமையானதால் இப்புகழ்ச்சி பெற்றாலும் இயல்பில் இதன் நிற ஒர் எடுத்துக் காட்டானதே. ஐயனாரிதனாரும், கறவை காவலன் திறனொடு பொரீஇப் புறவு அலர் பூவைப் பூ புகழ்ந்தன்று' எனப் புகழ்ச்சியை குறித்தார். - மகளிரில் கருப்பழகிகள் இப்பூவின் நிறத்தால் குறிக்கப் பட்டனர். 1 தொல். பொருள் 68 : 1.0. 2. பு, வெ, மா : பா.ாண் . 8