பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

535


மேலும், "இலையில் பிடவம் ஈர்ம்மலர் அரும்ப' (நற் : 242 : 1) 'வான்பிசிர்க் கருவியிற் பிடவுமுகை தகைய” (ஐங்:461:1) "நெருங்கு குலைப் பிடவம்' (அகம் : 23 : 3, 4) "குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம் கூதிர் அற்சிரத்து ஊதை துாற்றும்’ (அகம் : 183 11-13) 'வெண்பிடவு அவிழ்ந்த" (அகம் :184 :7) - என்பவற்றால், பிடவம்பூ, "இலையில்லாமல் பூக்களே நிறைந்திருக்கும். மழைத்துளி வீச்சால் மலரும் அரும்புகள் நெருங்கிக் குலையாகப் பூக்கும், முகை கூரியதாகத் தோன்றும். கொத்தாகப் பூக்கும் கமழும் மணத்தைப் பரப்பும், இதன் மலர்ச்சி நிறம் வெண்மை’ எனத் தொகுத்துக் காணலாம். இதன் முகைக்கொத்து செண்டுபோலத் தொகையாகத் தோன்றுவது ஒர் அழகு. இக்கொத்து விரிந்தால் மலர்கள் வெண்மைநிறத்தில் நல்ல சுற்று வட்டமாகத் தோன்றுவதை, “... . ... ... ... ... ... நிலவெனத் தொகுமுகை விரிந்த முட்க்கால் பிடவின்' -என வட்ட நிலவாகக் கண்டார் மள்ளனார். அவரே இதன் முகையை மகளிரது பல்லுக்கு உவமையாக்கி, "வை ஏர் வாலெயிற்று ஒண்ணுதல் மகளிர்” -என்றார். கொத்தாகப் பூத்துக் குலுங்கும் இம்மலர்க்காட்சியில் மனம் வைத்த கம்பர் சுவை பயக்கும் உவமை கண்டார். ஆயர் மகள் பால் கறக்கின்றாள். கறக்கின்றாளா? இல்லை, கையிலுள்ள முழாவில் பிழிகின்றாள். முழாவில் பால் நுரையுடன் நிறைகின்றது. விளிம்பின் மேலும் பால் நுரை பம்பி நிற்கின்றது. இதனைக் கண்ணில் நிறுத்தி, 1 அகம் : 844 : 2, 3,