541
மரூஉ.மொழியாகும். குருத்து என்பதன் மெலிந்த சொல்லான வகையில் வேறுபொருள்தரும் சொல்லாகவும் குருந்து அமையும்.
"ஓங்குசினைக் குருந்தின் அல்கு நிழல்' -என்றபடி இது நிழல்தரும் மரம். மராமரத்துடன் உயர்ந்து வளர்வது 'ஒங்கு குருந்து' எனவும் உயர்த்தப்பட்டது. மயில் இருந்து அகவும் என்றனர். -
முல்லைக்கொடி பற்றித் தழுவிப் படரும் மரம் இது. 'குருந்து அவிழ் குறும்பொறை' என முல்லை நிலக் காடு சொல்லப்படும். மேலும் முல்லை நிலத்து மரம், செடி, கொடி களுடன் இணைந்தது. எனவே, குருந்து முல்லை நிலத்தது.
'கார் ஆர் குருந்தொடு முல்லை குலைத்தன” (திணை. நூ :112)
'கார் கொன்றையொடு மலர்ந்த குருந்து" (ஐங் : 436)
றி -இவ்வடிகள் குருந்து கார்ப் பருவத்தில் மலர்வதைக் குறிக்கின்றன.
“பூ மருது, பூங்காந்தள், பூங்கோங்கம் பூந்தாமரை' என்பன போன்று 'பூங் குருந்து' எனப் பூச்சிறப்பு குறிக்கப்பட்டது. இப் பூவின் நிறத்தையும் அளவையும் குறிஞ்சிப் பாட்டு அடையாளங் காட்டுகின்றது:
"மா இரும் குருந்தும்'4 -எனக் குறிக்கப்பட்ட அடைமொழி களில் 'மா' கருமையையும் இரும் பெரிய அளவையும் குறிக்கும்' நச்சினார்க்கினியரும்,
'கரிய பெரிய குருந்தம் பூவும்' என்று உரை தந்தார். இதன்படி இப் பூ கருநீல நிறத்தில் பூக்கும். தனிப் பூவாகப் பூக்கும். ஒவ்வொரு பூவும் குருந்தின் குவி இணர்' என்றதன் படி இதழ் குவிந்தது. தனிப்பூவாயினும் ஒரு கொப்பில் சில அமைவதால் 'இணர் எனப்பட்டது. • , , ,
1 அகம் : 304 : 1.0. 4 sist, ut : 95 2 திணை. ஐ . 18 5 கார் ! 15. 3 நற் : 821 :9.