பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/562

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
542


இதன் அரும்பு பசுமையாகத் தோன்றுவதால் நனைப் பசுங் குருந்து' எனப்பட்டது. இவ்வரும்பின் வடிவமைப்பு பாம்பின் தலை போன்றது. இதனைக் கொங்கு வேளிர், '... ... ... ... குருந்தும் கோடலும் அரவுகொண்டு அரும்ப? -எனக் காட்டினார். இப்பூ சற்றுப் பெரியதாகையால் இதில் தேன், பிற மலர்களைவிட ஓரளவில் கூடுதலாக இருக்கும் முன்னே முல்லைப் பூ மகட்பேசி நிறைவேறிய திருமணக் காட்சி ஒன் ைறக் கண்டோம். அத்திருமணத்தில் சுரும்புதான் நீர் வார்த்துக் கொடுத்தது. வார்த்த நீராக, 'நிறைந்த பூங்குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பு' -என வண்ணிக்கப்பட்டமை கொண்டும் இதன் தேனைப்பற்றி அறியலாம். முல்லை நிலத்து மக்கள் முல்லைப் பூவுடன் இதனைச் சூடுவர். இதனைச் சூடிக் 'குருந்தங் கண்ணிக் கோவல"ராகவும். குருந்தம் பூங் கண்ணிப் பொதுவனாகவும், "முல்லை குருந் தொடு முச்சி வேய்ந்தவ ராகவும் முல்லை நிலத்து மக்கள் விளங் கினர். குருந்து என்றதும் கடவுளர் பங்கில் கண்ணன் கோவியர்க்காகக் குருந்தொசித்தது' ஒன்றாகும். குருந்த மரத்தடியில் சிவபெருமான் இடம் பெற்றது ஒன்றாகும். மாணிக்கவாசகர் எழுப்பிய ஆவுடையார் கோவிலின் திருமரமாகக் குருந்து நிற்கின்றது. குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டேத்தி” எனும் ஞானசம்பந்தர் பாடல் இதனைப் பூசெய் மலராகக் காட்டு கின்றது. . . இப்பூவைப் பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் மட்டுமே காண்கின்றோம். எட்டுத் தொகையிலும் பிற இடைக் கால இலக்கியங்களிலும் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளது இருப் 1 அகம் 85 :12, 8 சிவ, சி ; 1583 2 பெருங் : உஞ் 49 : 98,99, 4 ஞா. தே. முதுகுன்று : கி.