பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

543


பினும் இப்பூவிற்குத் தணிக்குறிப்பு ஒன்றைப் புறநானூற்றில் மாங்குடி கிழார் வைத்துள்ளார். குடியில் நான்கையும், உணவில் நான்கையும் சிறப்பிக்க இந்நான்கு அல்லது என்பவர், முதலில்,

  • *

... ... ...குருந்தே முல்லையென்று இந்நான் கல்லது பூவும் இல்லை' -எனக் குறிக்கத்தக்க நான்கு பூக்களைத் தேர்ந்து அந் நான்கில் குருந்தம் பூவைக் கோத்தார். இவ்வகையில் இப் பூ நான்கில் ஒரு மலர்' ஆகின்றது. அவற்றிலும் இரண்டை அறிய முடியாத நிலையில் இரண்டில் ஒன்றாகின்றது. அதனிலும் மலர்களிற் சிறந்த முல்லையொடு விளங்கும் மலராகின்றது. குருந்தைத் தழுவும் முல்லைக் கெடி யாளின் இனத்துத் தோழிகள் உளர். அவருள் ஒருத்தி அடுத்து வரும் பித்தி, - 14. பொழுதறி மலர். பித்திகம், 'பித்தி, பித்திகை, பித்திகம்’ என்னும் சொற்களால் குறிக் கப்படும் இது இக்காலத்தில் ‘பிச்சிப் பூ எனப்படுகின்றது. 'பித்தி’ என்பதன் எழுத்துப் போலி வழக்கே பிச்சி' என்பது. இவ்வழக்கு நச்சினார்க்கினியர் காலத்திலேயே இருந்தது. ஆயி னும் நிகண்டுகளில் பிச்சி' குறிக்கப்படவில்லை. சிறுசெண்பகம் கருமுகை, சாதிப் பூ என்னும் மாற்றுப்பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன. செண்பக அமைப்பில் சிறியதாகையால் சிறு செண்பகம்’ என்றும், இதன் முகையின் புறவிதழ் நிறத்தால் கரு முகை என்றும் பெயர் பெற்றது. சாதிப் பூ என்பதை இது போதும் மக்கள் கூறுவர். - - இது முல்லைக் குடும்பத்தைச் சேர்ந்த்து. முல்லை நிலத் துக் கொடிமலர். கொன்றை, கார்' என்னும் அடைமொழியுடன் பாடப்பட் டது போன்று இது "மாரிப் பித்திகம்" என்று பலராலும் பாடப் பட்டுள்ளது. இது மழைக்காலமாகிய கார்ப் பருவத்து மலராயி 4pಹಿ : 885 : 2, 3,