பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/564

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
544


னும் கூதிர் காலத்திலும் மலர்வது. கூதிரிலும் மழை உண்டா கையால் அக்குறிப்பைக் காட்டுவது போன்று மாரி என்னும் பொதுச்சொல்லைப் பருவ அடைமொழியாக்கினர். இது அந்திக் காலத்தில் மலரும். கூதிர்ப்பருவம் பகற் போதில் வானம் இருண்டு கதிரவன் காணப்படா நிலைகொண் டது அன்றோ? அந்நிலையில் மாலை கழிந்து இரவு தொடங் கும் அந்திப்பொழுதை அறிய இம்மலரின் மலர்ச்சியை அடையாள மாகக் கொண்டனர். கொடியில் மலர்ந்தாலும் அரும்பாகக் கொய்துவைக்கப்பட்டு மலர்ந்தாலும் அந்திப்பொழுதிலேயே மலரும். இவ்வாறு கொய்து பூந்தட்டில் வைக்கப்பட்டிருந்த பதம் வாய்ந்த அரும்பு விரிவதைக் கொண்டும் மணப்பதைக்கொண்டும் அந்திப்பொழுது வந்ததை, அறிந்து இரவிற்குரிய விளக்கு ஏற்றப்பட்டதை நக்கீரனார், '................ பிடகை (பூத்தட்டு) பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதங் கமழப் பொழுதரிந்து இரும்பு செய் விளக்கின் கர்த்திரிக் கொளி இ' -எனப்பாடினார். கொடியில் இம்மலர் மிகுதியாகப் பூக்கும். 'கொயல் அரும் நிலைய மாரிப் பித்திகம்'2 -என்றபடி கொய்யக் கொய்யக் குறையாத அளவில் மிகுதியாகப் பூக்கும். "பைங்கால் பித்திகம்' (நெடுநல் : 39 : குறி. பா : 1.17) என்றதன்படி இவ்வரும்பின் காம்பு பசுமையானது. அரும்பு முனைப்பகுதி செம்மை கொண்டது. மாரிக்காலத்தில் வருந்தும் தலைவி இவ்வரும்பைக் கண்டு, 'பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே' என இதன் சிவப்பைத் தன் ஆற்றாமையால் அதிகப்படுத்திப் பேசினாள். 1 நெடுநல் : 39-42 8 குறு : தி4 : 1, 2, 2 அகம், 42 : 2 -