பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/565

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
545


இச்செம்மை, அரும்பின் முதுகுப் புறத்தே தோன்றுவதையும், அக் காட்சி மகளிரது கடைக்கண் செம்மைக்கு உவமையாவதையும் பலரும் பாடினர். கபிலர், “......பித்திகத்து.....பெயலேர் மணமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்'1 -எனப்பாட இதனை எடுத்து மொழிவதுபோன்று சிறைக்குடி ஆந்தையார் என்பார், "மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமு ைக் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்' - என ஒரடியை அவ்வாறே அமைத்துப்பாடினார். இதுபோன்றே 'மாரிப் பித்திகம்' என்பதும் பலராலும் அமைக்கப்பட்டது. இப் பூ மணங் கமழ்வது. இதனை அரும்புப் பருவத்தில் கொய்து பனைமட்டையை பசுங்குடையாக்கி அதிற் பெய்து, பொதிந்து வைப்பர். விடியலில் விரித்தால் கம்மென்று மனம் பரவித் தண் னென்றிருக்கும். இதனைச் சிறைக்குடி ஆந்தையார், - * மாரிப் பித் திகத்து நீர் வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடை பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்து விட்டன்ன நறுந்தண்ணியள்'3 -என்றார். இம்மலரின் மணங்கருதியும் எழில் கருதியும் மகளிர் சூடி பம் அணிந்தும் ஒப்பனை செய்துகொள்வர். இக்கோதை "பித்திகக் கோதை' எனப்பட்டது. புணர்ச்சிக் காலத்திலும் மகளிர் இப்பூவால் ஆகிய மாலையை முத்துமாலையுடன் மார்பில் அணிந்து மார்பிடம் ஞெமுங்குமாறு காதலன் இறுகத் தழுவியதை நற்றிணை (314) பாடிக்காட்டியது. w ஆடவரும், 1 அகம் : 42 : 1, 2, 8 3 குறு : 168 : 1-4 2 குறு : 222 : 5, 6 4 பெருங் , 1 : 88 :18, 崇85