பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546


"பைங் கால் பித்திகத்து ஆயிதழ் அலரி அந்தொடை ஒருகாழ் வளை" த்துக் குஞ்சியில் சூடி யதைக் கபிலர் பாடினார் இவ்வாறு இருபாலரும் விரும்பிச் சூடுவதால் இப்பூ, "பித்திகை விரவு மலர் கொள்ளிரோ' -என விற்கப் படும் பூவாக விளங்கியது. இதன் முகை மிக மொழுக்கையாக அன்றி ஒரளவில் கூரி யது. காதல் முடங்கல் திட்டுவோர் இதனை எழுத்தாணியாகப் பயன்படுத்தினர். கோவலனுக்கு எழுதிய மாதவி இதன் அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து உதறித் தாழை மடலில் எழுதினாள்.3 இவ்வாறு அக்காலத்தில் பலவகையில் பயன்பட்ட இப்பூ இக்காலத்தில் எளிய மக்களும் சூடப் பயன்படுவது. 'உச்சி வகிடெடுத்துப் பிச்சிப் பூவைச்ச கிளி பச்சைமலைப் பக்கத்திலே மேய்வதாக" இக்காலத்திலும் கேட்கின்ருேம் அன்றோ? முல்லையினத்துப் பித்திகம் மண அமைப்பாலும் வடிவமைப் பாலும் இலக்கியத்தில் இடம் பெற்றது. மணமும் குறிப்பிடத் தக்க வடிவமைப்பும் அமையாத மலர்களும் பாடப்பெற்று அறிமுக மாயினமைக்குப் பகன்றை ஒர் எடுத்துக் காட்டாகும். 15. கரிமுக மலர், பகன்றை. - 'ஒரு வண்ணத்தி வெளுத்த துணிக்கு கஞ்சிப்பசை தோய்த்தாள். ஒரு தப்பு தப்பி முறுக்கிப் பிழிந்தாள். முறுக் கோடு குளத்து நீரில் போட்டாள். வெண்மையான துணி திருகிய முறுக்கோடு நீரில் மிதந்தது.” கழார்க்கீரன் எயிற்றியனார் என்னும் புலவர் நின்று கண்டார். நீரில் முறுக்கு பிரியாமல் கிடக்கும் துணிக்காட்சி யை ஒர் உவமையாக்க எண்ணம் ஒடியது. 1 குறி. பா. 117, 118, 8 சிலம்பு : 8 58-55, 2 நற் ; 97 : 1.