பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21


அமெரிக்கர்பால் இவ்வணிகம் ஆர்வ நடவடிக்கையாக மாறி யது. அமெரிக்க நாட்டரசு இவ்வணிகத்தை ஒரு பெருமையாகக் கருதியது. அதனால் இவ்வணிகத்தின் ஊ தி யத் தை யோ இழப்பையோ பார்க்காமல் 0.27 விழுக்காட்டாளவு திட்டத்தை மலர்ப்பெருக்கத்திற்கென ஒதுக்கியது. மலர்களின் இயற்கை மணத்தைக் கொண்டு செயற்கை வடிப்பு முறையால் அத்தர், பன்னிர் முதலிய மணப்பொருள்கள் சமைக்கப்பட்டன. இச்சமைப்பில் உரோசா, முல்லை மலர்கள் மேம்பட்டு நின்றன. செண்டு என்னும் கமழ் நெய்ப்பு' தோன்றியது. உரோசாவிலிருந்து வாலை மூலம் வடித்தெடுக்கப் ப்ட்ட அத்தர் ஒரு பெரும் வணிகப் பொருளாகியது. ஒரு சான்று. கொண்டு இதன் பெருமையை உணரலாம்: பல்கேரிய நாட்டின் சோபியா நகரில் உரோசாப் பள்ளத் தாக்கு என்றெரு பகுதி உள்ளது. இங்கு உரோசா இதழ்களைக் கொய்வதற்காக 2 நூறாயிரம் தொழிலாளர்கள்பணி செய்கின்றனர். 340 மலர்களிலிருந்து ஒர் இராத்தல் இதழ்கள் தொகுக்கப்படும் எத்துணையோ ஆயிரக்கணக்கான இதழ்களிலிருந்து எடுக்க படும் அத்தரின் அளவு இரண்டு துளிகள்தாம். - உலகெங்கும்-குறிப்பாக இசுலாமிய நாடுகளில் அத்தர் ஒரு தகுதியான வருவாய் தரும் வணிகப்பொருளாக வளர்ந்துள்ளது. இதுபோன்று மலரிலிருந்து சமைக்கப்படும் பல்வகைப் பொருள் களின் வணிகம் சுட்டிக் கூற்த்தக்க ஒன்றாக உள்ளது. நம் தமிழகத்திலும் மதுரைப் பகுதியில் பயிராகும் முல்லை மலர் நாள்தோறும் வான ஊர்தி மூலம் மலைநாடு முதலிய கீழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. ஒரு சிறிதளவான வெளிநாட்டு வருவாயை இது வழங்குகின்றது. பொருளியல் கலையிலும் மலர்க்கலை பங்குபெற்றுத் திகழ் வதை இவ்வளவில் சுருக்கமாகக் கொள்ளலாம். ஆன்மவியலில் அமர்ந்த பலவகை இயல்களிலும் பங்கு கொண்டுள்ள பூ ஆன்மவியலி லும் இடம்பெயராத சூழலைச் பெற்றுள்ளது. ஆன்மவியல் என்பது