பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556


'ஊரெழுந்து உலறிய பீர் எழு முதுபாடி' - எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், மனையும் இல்லும் பாடியும் பாழ்பட்டதைப் பீர்க்கு முளைத்ததுகொண்டு காட்டினர். பீர்க்கு மணமற்றது; அழகு செய்வதற்கு உவமையாவது; ஊர் பாழ்பட்டதற்கு அறிகுறியாவது. நிறைகளைவிடக் குறைத் தன்மைகளே இருப்பினும் அக இலக்கியத்திலும் புற இலக்கியத் திலும் பரவலாக இடம்பெற்றுள்ளமையால் இந்நூலிலும் இவ் விடத்தைப் பெற்றுக்கொண்டது. பீர்க்கம் பூ சூடும் பூ அன்று. சூடப்பட்டதாக வழக்கிலும் இல்லை; இலக்கியத்திலும் இல்லை. ஆனால், குறிஞ்சிக்குமரி குவித்த மலர்களில் (குறிஞ்சிப்பாட்டில்) 'பாரம் பீரம் பைங்குருக் கத்தி” என இடம்பெற்றுள்ளது மட்டும் இதற்கொரு தகுதி. இதனையடுத்து இருப்பைப் பூவைக் கொள்ளலாம்; ஏன்? 17. இனிப்பு மலர். இருப்பை. மணமில்லாத மலர் பூக்கும் இலக்கியத் தோட்டத்தில் மணம் மீறிய பூ மலர வேண்டாவா? பசலைப் பூ இலக்கிய உடலில், பால்முத்துப் பூ பழக வேண்டாவா? இழிவாகப் பாழ்செய்யும் இலக்கிய மனையில், இனிப்பாகப் பால் சுரக்கும் இருப்பைப் பூ இருக்க வேண்டுமன்றோ? இவ்வகையில் இருப்பை பீரத்தை அடுத்து இடம்பெறுகின்றது. பீர்க்கிற்கும் இருப்பைக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை. பீர்க்கு மணம் அற்றது. இருப்பை மிகு மணம் உற்றது. முன்னது சுவையற்றது. பின்னது இனிப்புச் சுவை தருவது. அஃது இதழ் விரி பூ இது குட இதழ்ப் பூ அது கொடிப் பூ. இது கோட்டுப் பூ. போனது முல்லை நிலப் பூ வருவது பாலை நிலப்பூ. இரண்டிற்கும் ஒர் ஒற்றுமை உண்டு. இரண்டும் சூடாப் பூக்கள். இச் சூடா ஒற்றுமையிலும் ஒரு மாற்றம் உண்டு. பீர்க்குக்குப் பத்துப்பாட்டில் இடம் உண்டு. சூடப் பயன்படாமலே அகம் : 1.67 : 10, 2 ёф, ни, 93,