பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

557

'யாத்த துரணித் தலைதிறந் தவைபோல் பூத்த இருப்பைக் குழைபொதி குவியினர் கழல்துளை முத்திற் செந்நிலத் துதிர' -முதலடியில் பிறப்பாம் அரும்புக்கு ஒர் உவமை, வளந்த மலருக்கோர் உவமை; வீழ்ந்த வீக்கு ஒர் முத்தான உவமை. இப்பருவ வளர்ச்சியைக் கல்லாடனார் விரித்துள்ளார். அம்பு நுனை போல் அரும்பு: செப்புத் தகடு போன்ற சிவந்த தழை, அத்தழையிடையே நெய்போன்ற முகப்போடு துளையுடைய பூ; அதன் வாய்ப்புறம் துய்யென்ற இழைகள்: புறவிதழாம் ஆரத்திலிருந்து கழன்று காற்றடிப்பில் ஆலங்கட்டி போல் சிதறி விழுதல். சிவந்த நிலத்தில் அதுவெண்மையாகத் தொடர்ந்து கிடப்பது இறைச்சிமீது கொழுப்பு கிடப்பது போன்றது' -என்று வண்ணித்தார். இதனை முழு வரலாறு எனலாம்" உவமைகள் ஒய்ந்துவிடவில்லை. பாலை பாடிய பெருங்கடுங்கோ தொடர்கின்றார் : "பூனையின் அடிபோன்ற குவிந்த முகிழ்; யானையின் மருப்பைக் கடைந்தது போன்ற துளைபெற்ற வான் பூ. 3. இவ்வாறு மேலும் இரண்டு உவமைகள். பெயர் காட்டாத ஒரு புலவர் இதனை உவமையாக்கி, "இருப்பைப்பூவைப் போன்ற இரால் மீனின் தலை" - என்றார். எத்துணை உவமைகள்? ...! அம்புக் குப்பி, முத்து, ஆலங்கட்டி, கொழுப்பு, பூனையின் அடி, கடைந்த யானை மருப்பு, இரால் மீன் தலை. இதன் புறவித ழுக்கும் ஒர் உவமை : வேலின் இலைபோன்றதாம். வண்ணத்திற் கும் வடிவத்திற்கும் ஏற்ற உவமை இது. உவமை வழி இலக்கியம் படைக்க உதவிய இருப்பைப் பூ, முத்து வெள்ளையில் திரண்ட முத்தன்ன எழில் கொண்டது. அழ, 1 அகம் : 225 : 10-12, 3 அகம் : 267 : 6, 7, 2 அகம் : 9 :1-19, 4 நற் : 111 : 1, 2,