பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558


கான அமைப்புடன் அதன் அழுத்தமான மணத்தைக் குறிக்க வேண்டும் சற்று அளவை மீறிய மனமே, இருப்பை பூத்தால் அப்பகுதியெல்லாம் அதன் மணம் உயிரினங்களை அழைக்கும். விலங்கினங்களைக் கவர்ந்திருக்கும். தொடர்ந்து அம்மணத்தைக் கொள்ளின் மூக்கை மூடிக் கொள்ளும் அளவில்கூட அதிக அழுத்தமானது. இவ்வழுத்தமும் அதன் சிறப் பிற்கு அறிகுறியாகும், - "ஆலையில்லா ஊருக்கு இருப்பைப் பூ சருக்கரை' என் னும் பழமொழி அதன் இனிப்புச் சுவையை அறிவிக்கின்றது. அதன் அழுத்தமான மணம் அவ்வினிப்பில் ஒரு தெவிட்டலை ஏற் படுத்தினும் "தெவிட்டும் சுவை' என்னும் சிறப்பு இதற்குண்டு. கண்ணுக்கினிய முத்துக் காட்சியைக் காட்டி இனிப்புள்ள என்னை உண்ண வாரீர்” என அழுத்தமான மனம் என்னும் அழைப்பை அனுப்பும் இருப்பை, விருந்தோம்பும் பண்பை நினை வுறுத்தவது. அழைப்பை ஏற்றுக் காதல் இனைகள் விருந்துண்ணும். "சற்றே பிரிந்து வந்த ஆண் மான் உதிர்ந்து கிடக்கும் இப்பூவைக் கண்டு தன் துணையை அழைத்து அதனை உண்பித்ததாம். 'தின்னும் மான்களை மாடுமேய்க்கும் சிறார் வில்லால் விரட் டுவர். விரட்டிவிட்டுக், கிழ மாடுகளை மேய விடுவர். 2 இருப்பையின் இனிப்பால் கரடிக்கு எச்சில் ஊறும். ஈன்ற கரடிகள் உதிர்ந்து கிடப்பவற்றை உண்ணும்.3 ஆண் கரடிகள் மரத்தின் மேல் ஏறி ஒவ்வொன்றாகப் பறித்துத் தின்னும். மரத் தில் ஏறிப் பறித்துத் தின்பதற்கு கல்லாடனார் கரணியமும் கூறி னார். வேடர் வருவர்; தின்னும் ஆர்வத்தில் அவர் வருகையைக் காண இயலாது போகும், என்று மரத்தின்மேல் ஏறிக் கனிந்த பூக் களாகப் பறித்துத் தின்னும்'." - 1 «aë : 321. i 4.–7. 4 அகம் : 149 : 8, 4. 2 அகம் : 1.07. 5 அகம் : 171 11, 1. அகம் 9 : 4 - 9, - - -