பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/579

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
559


விலங்குக்கு விருந்தாவது போன்று பறவைகளுக்கும் விருந் தாகும். வாவல் வேப்பம்பழத்தைத் தின்னும். அதில் வெறுப்புத் தோன்றின் அக் கைப்புச் சுவை மாற இனிப்புள்ள இருப்பைப் பூக் களைத் தின்னும். இதனால் பழந்தின்னும் வாவல் பூத்தின்னும் வாவல் ஆகின்றது.

  • இது மாந்தருக்கும் சுவையான தின் பண்டம்; சிற்றுணவு: ஊட்ட உணவு; நோய்போக்கும் மருந்துமாகும்.

கனிந்த இப்பூ தேன் போன்ற கசிவைத் தரும். இதனை எடுத்து உண்பர். ஒவ்வொன்றாகச் சுவைப்பர். சேர்த்து வைத்துத் தட்டையாக்கிஉரியபொருளிட்டுஉண்பர். வெல்லத்துடன் சேர்த்து உருண்டையாக்கி உண்பர். தேனுடன் கலந்து குல்கந்து செய்து ஊட்டம் சேர்ப்பர். இப்பூ நீர் வேட்கையைத் தணிக்கும். பாலை நிலத்து வெப்பத்தைத் தணித்துச் கொள்ள இதனைத் தின்பர். இவ்வாறெல்லாம் பயன்படுவதால், வேடர்குலப் பெண்கள் உதிர்ந்த பூக்களை ஈன்ற பெண் கரடிகள் தின்றபின் எஞ்சிக் கிடப்பவற்றைத் திரட்டுவர். திரட்டி மூங்கிற் குழாயில் அடைப்பர். ஊர்க்குள் சென்று விற்பர். தெருத் தெருவாகத் திரிந்து விற்பர் 2 இவ்வகையில் விற்பனைப் பொருளாகிப் பொருளியலிலும் இருப்பை இடம் பெறுகின்றது. இப்பூவைக்கொண்டு குடிநீர் செய்து பருகலாம். அரைத்துப் பாவில் கரைத்துப் பருகலாம். பூவை வதக்கி கருக்கு நீரிடலாம். இவற்றால் சிறு நோய்கள் தீரும். இதனைக் காயவைத்துப் பொடியாக்கிப் பக்குவம் செய்து சருக்கரை செய்வர். மயக்கந்தரும் செயற்கைக்கள் - சாராயம் - காய்ச்சலாம். இதன் மருத்துவத் தன்மைகளை அகத்தியர் குண பாடம், குன்றா இருப்பையின்பூ கூர்மதுரம், வாசனையாம்; தின்றாற் பயித்தியமும் சேருங்காண் - மன்றலுறுந் தார்குழலே பித்தசுரம் தாகந் தணிந்துவிடும் 1. தற் : 279 , 1-8, 2 அகம் : 381 : 1-7,