பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564


மருத்துவத்தில் இப்பூ குருதிப் பித்தத்தைப் போக்கும் மருந்தாகும். மயிலை என்னும் இயற்பெயர்கொண்ட இக்கொடிப் பூ முல்லை நிலத்தில், வெண்மை நிறத்தில், கார்காலத்து நள்ளிரவில் பூத்து மணம் பரப்பி "நள்ளிருள் நாறி” எனும் சிறப்பைப் பெற்ற பூவாகும். இனத்தாலும் நிறத்தாலும் பிறவற்றாலும் மயிலையுடன் கொகுடி தொடர்புடையது. 19. கோவிற் பெயர் மலர். கொகுடி. மயிலைப் பூவைப் போன்று கொகுடி என்பதும் சங்க இலக் கியத்தில் ஒரிடத்தில் மட்டும் பேசப்படும் பூ. குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் மட்டும், 'நறுந்தண் கொகுடி' ! - என மணத்துடன் குளிர்ச்சி உடையது' என்னும் அடைமொழியோடு குறிக்கப்படுகின்றது. இஃதும் ஒரு முல்லையினப் பூ. எனவே, இஃதொரு கொடிப் பூ. பிற்காலப் புட்பவிதி'யும், "இருவாட்சி கொகுடி பிச்சி இவை யெலாம் கொடிப்பூ வாமே என்றது. இலக்கியங்களில் அருகிய இடம் பெற்றுள்ள பூ. தேவார மூவரில் திருஞானசம்பந்தர் மட்டும்,

  • * * * * * * * * * so ... புன்னையே கொகுடி முல்லை’ 2 எனப்பாடி யுள்ளார். தோலாமொழித்தேவர் தமது சூளாமணிக் காப்பியத்தில்

'குவிமு ைகக் கொகுடி' 3 -எனப்பாடி இதன் முகை முல்லைபோன்று கூரியதன்று குவிந்த அளவில் மொட்.ை முகை எனக்காட்டுகின்றார். - 1 குறி, பா : 81. 3 ஆளா : 剝 2 ஞா. தே : வடகுரங்கு : 4 : 1. து து