பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

565


இவ்வொரு வேறுபாடன்றி மற்றவகைகளில் முல்லைபோன்று அமைந்தது இப் பூ. வெண்மைநிறப்பூ காட்டுப்பகுதிகளில்அருகித் தோன்றும். - இக்கொடிப் பந்தரின் கீழ் ஒர் அருவுருவத் திருவுருவம் இடம் பெற்றது. அது பின்னர் கோவிற் கட்டடமாகியது. கொகுடி முல்லை யில் இடத்தைக்கொண்டதால் எழுந்த கோவில் கொகுடிக்கோவில்’ எனப் பெயர்பெற்றது. சீர்காழிக்கு மேற்கே ஆறு கல் தொலைவில் உள்ள தலைஞாயிறு என்னும் ஊரில் உள்ளது. இதனை மேலைச் சீர்காழி என்றும் வழங்குவர். தேவாரத்தில் இது திருக்கருப்பறியலூர் எனப்படும். இக்கோவிலை ஞானசம்பந்தர், "குற்ற மறியாத பெருமாள் கொகுடிக் கோயில்' என்றும் சுந்தரர். 'பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்" 2 -என்றும் பாடியுள்ளனர். பூப் பெயரால் கோவில் பெயர் பெற்றமை மிகக் குறைவு அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கொகுடிக் கோவில் அமைந் துள்ளதால், இப்பூவைக் கோவிற் பெயர் மலர்' என்று சொல்லலாம். 20. கோசிக ஆடை மலர். பாதிரி. ’பூவோ, பூ! பாதிரிப் பூ!' - பூக்காரி வீதி வழியே விலை கூறினாள். கணவனைப் பிரிந்து அறையிற் கிடந்த மனைக்கிழத்தி நெஞ்சம் சோர்ந்தாள். பூக்காரியின் சொல்லோடு பாதிரிப் பூவின் மணமும் புகுந்து அவளைத் தாக்கிவிட்டன. பாதிரியின் மணம் பிரிந்தோர் உள்ளத்தில் காம உணர்வைக் கெல்லிவிடும் தன்மை வாய்ந்தது. அவ்வுணர்வுக் கெல்லலால் நொந்த அவள் தன்னை மறந்து பூக் காரிக்காக நெஞ்சம் நொந்தாள். அவளுக்கு இவன்நோவானேன்? 1. ஞா. தே : கருப்பறியலூர் : 10 : 3, 2. சுந் , தே : கருப்பறியலூர் : 1 - 11,