பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

571


'அதிரல் பூவையும் பாதிரிப் பூவையும் சிறு செங்கால்ப் பூவையும் இட்டு மூடிவைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்தவுடன் "கம்மென்று மணம் கமழுமே அதுபோன்றமணம் என்றாள். பாதிரியோடு சேர்க்கப்படும் தகுதி பெற்றது அதிரல். இவ்வுறவு மட்டுமன்று; இரண்டும் அடுத்து அடுத்து மலர்பவை. இலக்கியங் களில் இரண்டும் ஒரே இடத்தில் உதிர்ந்து கிடப்பதையும் 2 இரண்டும் சேர்த்துக் கூந்தலில் முடியப்படுவதையும் 3 கனலாம். இவ்வுறவு மட்டுமன்று; அதிரல் கொடி கோங்க மரத்திலும் படரும், பாதிரி மரத்தையும் சுற்றித் தழுவிப் பற்றிப் படரும். இவ் வகையால் அதிரல் பாதிரியோடு இனைத்துப் பேசத்தக்கது. இப்பூங்கொடி மரங்களில் மட்டுமன்று; விரரைப் புதைத்த புதைகுழிக் கற்களின் மேலும் படர்ந்து வீரர்க்கு நாட்பூ சூட்டும்.4 இது துாறாக முளைக்கும். பல முளைகளில் கிளைக்கும். அப்போதும் தூறாகவே தோன்றும். அதனால் அதிரல் என்னும் சொல்லுக்கு 'அதிரல் விரி துரறு' -என விரிதுாறு’ என்று பொருள் கூறின நிதண்டுகள் TGI, அதிரல் என்பது இதற்குக் காரணப் பெயராயிற்று. இத்துாற்றிலிருந்து படரும் கொடி நுண் ணிய திரட்சிகொண்டது. பல வளார்களாகச் செறிந்து படரும். நீண்டு படரும் பசிய நிறங்கொண்டதாகக் காணலாம். இவற்றை, நுண் கொடி அதிரலொடு’ (அகம் : 237 : 2) "வரிமென் முகைய நுண்கொடி அதிரல்’ (ειαό : 391 : 2) 'ததர்கொடி அதிரல்’ அகம் : 289 : 2) சமாக்கொடி அதிரல்' (நற் : 52 : ) "பைங்கொடி' அதிரல் (அகம் : 187 : 6) -எனும் அடிகளி லும் காண்கின்றோம். இக்கொடி காற்றில் அடித்துாறுடன் சேர்ந்து அசைவதை இரவில் காவலர் அசைந்து நடைபோடுவதற்கு உவமையாக்கினார் நப்பூதனார்." 1 நற் : 887 : 3 - 6. 4 அகம் : 289 : ; - 8. 2 gs på: 99: 5–7; 237: 1, 2. சேந் தி: மரப் பெயர், 3 அகம் : 261 : 1 - 8. 6 முல். பா : 51 - 54,