பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/592

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
572


இக்கொடி பாலை நிலத்து மரங்களாகிய கோங்கிலும் பாதிரியிலும் படர்வது. வீரர்தம் புதைக்குழிமேல் படர்வது கூறப் பட்டது. இப்புதைகுழி பாலை நிலத்தில் அமையும். இதனை, ... ... ... அதிசல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் அரம்" 1 -என இளங்கீரனார் பாடி னார். இங்கு கூறப்பட்டமை போன்று இது சுரத்தில் படரும் பாலைநில மலர். "புதுப்பூ அதிரல் தாஅய் கதுப்பரல் அணியும் காமர் பொழுதே" 2 - என இளவேனிற் பத்தில் அதிரல் கூறப்பட்டது. மாமூலனார் "வேனில் அதிரல் 3 என்று பாட அவ்வேனில் 'முதிரா வேனி" லாகிய இளவேனில் என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ விளக்கிக் காட்டினார். இவற்றால் இப்பூ இளவேனிலில் பூக்கும் பூவாகும். இளவேனிலில் எந்நேரத்தில் பூக்கும்? இஃது இரவு நேரத்தில் பூக்கும். இதனை வேம்பற்றுரர் குமரனார் பாடிய, "எல்லி (இரவில்) மலர்ந்த பைங்கொடி அதிரல் - என்னும் அடியாலும் அறியலாம். இரவில் எந்நேரத்தில் மலரும்? நப்பூதனார் நேரத்தைக் கண்டு காட்டியுள்ளார். 'கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட நெடுநா ஒண்மணி நிழ்த்திய நடுநாள் அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்" என, கைத்திரிகொண்டு அணைந்த விளக்குகளை ஏற்றும் இரவில், மாடுகளின் கழுத்து மணி ஒலியும் அடங்கிய நடு நாளில் - நள்ளிரவில் அதிரல் பூத்ததை கூறியுள்ளார். எனவே, 1 அகம் 289 : 2 - 4. 4 நற் : 887 : 8 2 ஐங் 845 5 அகம் 157 5 3 ఉఉు : 9 ; 25 ல் முல். பா:49-51.