பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/593

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
573


அதிரல் நள்ளிரவில் பூக்கும் பூ. இரவில் மலர்ந்த அதிரல் பூவை யானை வைகறையில் உணவாகக் கொள்வதை முன்னே கூறிய குமரனாரே அறிவிக் கின்றார். இப் பூ முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தது. சிலப்பதிகாரத் தில் அரும்பத உரைகாரர். இதனைக் காட்டு மல்லிகை' என்றார். இங்கு காடு, சுரம், அஃதாவது பாலைநில மல்லிகை எனப்படும். இதற்கே அடியார்க்கு நல்லார் "மோசி மல்லிகை' என்று விளக்கந் தந்தார். மோசி என்பது திரண்டு கூர்மைகொண்டது” என்னும் பொருளைத் தருவதாகும். இதற்கேற்ப அதிரலாம் மோசி மல்லிகை யும் அடிமுதல் திரண்டு முனை கூர்மை காட்டும் அரும்பைக் கொண்டதாகின்றது. இது பொருத்தமும் ஆகும். இதற்கேற்ப இப் பூவின் முகை, 'குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் 2 -எனப்பட்டது அவ்வை யாரால். இது கூர்மையைக் குறிக்கும் வடிவ உவமை. காவன்முல்லைப் பூதனார், 'பார்வல் வெருகின் (பூனையின்) எயிற்றன்ன வரிமென் முகைய மென்கொடி அதிரல்'8 -என்றார் இது வடிவொடு வண்ண உவமையுமாகும். குயில் வாய்க் கூர்மையும், பூனைப் பல் கூர்மையும் கொண்ட இம்மல்லிகை மோசி மல்லிகை" எனப்பட்டது. நச்சினார்க்கினியர், புறத்தின் பழைய உரைகாரர் முதலியோர் இதனைப் புனலிக்கொடி, புனலிப் பூ, புனவி என்றே கூறினர். புனலி (புனல் + இ) என்னும் சொல் நீர்ப்பிடிப்பைக் குறிப்பது. இதன்கொடி ஓரளவில் நீர் நைப்புள்ளது. அதனால் தான் மென்கொடி’, ‘பைங்கொடி’ எனப்பட்டது. வரண்ட பாலை நிலத்தில் இதன் ஒரளவு நீர்ப்பிடிப்பு ஒரு தனியாகக் குறிக்கப் பட்டது போலும். மேலும், மற்றொரு வண்ணனை இந் நீர்ப் பிடிப்பை இயைத்து நோக்கவைக்கின்றது. அது கூதிர்கால வண்ணனை: 1 சிலப்பு : 18 : 156 3 அகம் , 391 : 1, 2 2 புறம் : 269 : 1.