பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/594

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
574


ஈங்கை அரும்புடன் அதிரல் பூவும் மணல் மேட்டில் உதிர்ந்து கிடந்தது. மான் ஒன்று அவற்றின் மேல் அடி வைத்து அழுத்தி நடந்தது அப்போது இரண்டிலிருந்தும் நீர் குமிழியிட்டு வந்தது. இக்காட்சி வெள்ளியை உருக்கும் குப்பியாகிய மூசையைக் கவிழ்த்ததால் உருகிய வெள்ளி குப் பென்று வெளிவந்ததுபோன்று இருந்ததாக! மோசி கண்ணத்தனார் பாடினார். • , இங்கே குறிக்கப்பட்ட நீர், கூதிர் காலத்தில் குறிக்கப்படு வதால் பெரும்பகுதி மழை நீராகாது. மலரின் நீர்ப்பிடிப் பாகலாம். இதுகொண்டு புனலிப் பூ எனப்பட்டிருக்கும். இப் பூ முல்லைக் குடும்பத்தது என்ற அளவில், அதிலும் மல்லிகைப் பெயர்பெற்ற அளவில் இதன் திறம் வெண்மை என்பது கூறாமலே பெறப்படும். அவ்வெண்மையிலும் ஒவ்வொரு இதழிலும் சிறு வரிக்கோடு அமைந்திருப்பதை 'வரிமென் முகைய மென்கொடி அதிரல்' - என்னும் அடி காட்டுகின்றது. சிலம்பு இதனை, 'விரிமலர் அதிரல்' என்றது. இப் பூ ஆடவரால் கண்ணியாகவும், மகளிரால் பிற பூக்க களுடன் சேர்த்துக் கோதையாகவும் சூடப்படும். விரும்பிச் சூடப்படும் பூவாதலால் விற்பனைப் பூவாகவும் இருந்தது. பூ விற்போர் அகன்ற வட்டிலில் அதிரல் பூக்களை நிறைத்து மேலும் வைக்க இடமில்லாமல் பிற பூக்களைக் ஒழித் தனர் -என்பதைக் காவல் முல்லைப் பூதனார்,

  1. g

... ... ... ... ... ...அதிரல் மல்ககல் வட்டியர் கொள்விடம் பெறாஅர் விலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்’4 - எனப் பாடினார். இவ்வாற்றால், அதிரல் பூ, கொடிப்பூ: பாலை நிலப்பூ; 1 நற் : 1.24 : 4-8, .ே சிலம்பு : 18 158. 2 அகம் : 891 : 2 4 அகம் ; 891 : 2ண4,