பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/603

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
583


இப் பூ மரத்திலிருந்து கழன்று வீழ்ந்து வாடினாலும் மணமும் தேனும் கொண்டு திகழ்வது. இதனைத் திருத்தக்கதேவர் செவ்வந்தியோடு சேர்த்து, 'வகுளப் பூ முதிர்ந்து கழன்று வீழ்ந்து வாடிக் காய்ந்து கிடக்கும்போதும் வண்டுகள் மொய்த்துத் தேனை நக்கக் கொடுத்துக் கிடக்கும்’ என்பதை, "மலர்ந்த செவ்வந்திப் போதும் வகுளமும் முதிர்ந்து வாடி உலர்ந்துமொய்த் தளிதேன் நக்கக் கிடப்பன". -எனக்கூறி உவமையாக்கி, 'நற்குடும்பத்தில் தோன்றிய நல்லோர் செல்வம் குறைந்தாலும் தம்பால் இல்லை எனக் கையேந்திய வர்க்கு, உயிரைப் பண்டமாற்றாக்கியேனும் கொடுத்து உதவுவர். -என்னும் பொருளுரையை வழங்கியுள்ளார். மலர்ச்சிக்குக் கூறப்படும் கவிமரபில் வகுளம், மகளிர் எச்சில் உமிழ மலரும் என்பர். வகுளம் பூ கழன்றபின் மையத் துளையுள்ளதாகையால் நாரால் கோத்துத் தலையில் சூடுவர். இதனைச் சிவனுக்குரியதாக ஞானசம்பந்தர் பாடினார், பிறரும் பாடினர்; இப் பூ நம்மாழ்வார்க் குரிய சின்னப் பூ என்பதை அவரே, “... . . . . ... வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்'2 என்று பாடினார். வகுளம், பூவாற் சிறியதாயினும் மணத்தாற் பெரிது. 25. பொன் தகட்டு மலர். செருந்தி. செருந்தி ஒரு மரம். ஒருவகைக் கோரையும் உண்டு. பூவின் தொடர்பில் மரமாகக் கொள்ளும் குறிப்புகளே இலக்கியங்களில் காணப்படுகின்றன. கலித்தொகையில் மராமரப் பூ, காஞ்சி மரப் பூ, ஞாழல் மரப் பூ, இலவ மரப் பூ ஆகியவற்றோடு இச்செருந்திப் பூவும் கூறப்பட்டுள்ளது. இறுதியில் அப்பாடல், .1 : 41 திருவாய் 2 47 : 13 ھ ق : ہن ۲ ھ کو 1