பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/604

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
584

ចំទំ 'போதவிழ் மரத்தொடு பொருகரை கவின் கொள' - எர் 'மரம் எனவும் காட்டியது. இவ்வாறு மரங்களை அடுக்கும் இ; கியங்களும் மர இனத்தோடே செருந்தியைக் காட்டும். நிகண்டி களும் செங்கோடு, பஞ்சரம்' என்னும் பெயர்களைக் கூறு கின்றன. இவையும் மரக் குறிப்புடையவை. ஆயினும், உரையாசிரியர்கள் நெட்டிக்கோரை, வாட்கோரை, தட்டான்கோரை, கோரை என்றெல்லாம் பொருள் எழுதினர். இதற்குக் கரணியங்கள் உள. "இருஞ்சாய் அன்ன செருந்தி’ என்றார் ஒரம்போகியார், சாய் என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். அதுபோன்ற செருந்தி என்றமையும் ஒரு கரணியம். 'யானை நின்றால் மறையும் அளவு வளர்ந்துள்ள செருந்தி' என்பதைக் 'களிறுமாய் செருந்தி" ச் என்றார் மாங்குடி மருதனார். யானை மறையும் அளவை மலைப் புல், கோரை முதலியவற்றின் வளர்ச்சிக்குக் கூறுவர். மேலும், மழை வறண்ட காலத்திலும், மாந்தர் வாழ் வற்ற பாழிடங்களைக் குறிக்கும்போதும் சொல்லப்படும் கோரை முதலியவற்றோடு இச் செருந்தியும் சொல்லப்படும். எனவே, உரையாசிரியர்கள் அவ்விடங்களில் கோரையாக எழுதினர். ஆனால், அங்கெல்லாம் பூக்கும் குறிப்பு இல்லை. மேலும், ஒரிடத்தில் கோரையாகக் கூறும் நச்சினார்க்கினியார், குறிஞ்சிப் பாட்டில் செருந்தி - பூ , பிடி செருந்திப் பூ என்று எழுதினார். புட்ப விதியும் கோட்டுப் பூ என்றது. எனவே பூவைக்குறிக்கும் செருந்தி மரவகையைச் சேர்ந்தது. எனவே, செருந்திப்பூ கோட்டுப் பூ 'செருந்தி தாஅய இருங்கழிச் சேர்ப்பன்' (ஐங் 1.12) எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ (ஐங் : 141) 'நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ = یا « ه حسه ی په ما في ة ش غ ش & கழியுங் கானலும்' (அகம் 150 9, 12) என்றெல்லாம் நெய்தல் - بA நிலத்தில் செருந்தி கண்டு காட்டப்பட்டுள்ளது. எனவே, இது நெய்தல் நில மலர் நெய்தலை ஒட்டிய மருதநிலத்திலும் காட்சிதரும். கலி 26 1. 8 ஐங் .18 : 1. 3 குடா, நி : மரம் :7 :1; 4 மது, கிரீ: 172,