பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/607

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
587

; : ; §5? பிற்காலத்தில் அசோகை நெட்டிலிங்கம் என்றனர். பல்கலைக்கழகச் சொற்பொருட் களஞ்சியமும், கலைக்களஞ்சியமும் இவ்வாறு குறித்துள்ளன. நெட்டிலிங்கம் கிளைகளைப் பரப்பா மல் நெடு நெடுவென உயர்ந்து வளர்வது. செயலை, 'சினையெலாம் செயலை மலர” - என்றதன்படி கிளை களைப் பரப்புவது. - "ஓங்குசினை தொடுத்த ஊசல் பாம்பென".2 - என்றபடி ஊசல் கட்டி ஆடும் அளவில் கிளைகளைக்கொண்டது. மகளிர் விளையாடும் அளவிற்கும், மலைப் பாதைகளில் வெப்பத்திற்குத் துணையாகும் அளவிற்கும் நிழல் தரும் மரம். எனவே, நெட்டிலிங்கம் வேறு; செயலை வேறு. இலையமைப்பாலும், தளிர், பூ இவற்றாலும் வேறுபாடு உடையவை, செயலையின் பூவைப்போன்று இதன் தளிருக்கும் சமமான தகுதிஉண்டு. நிறத்தாலும் பயனாலும் இலக்கிய இடத்தாலும் இரண்டும் ஒத்த இடம் பெற்றவை. இரண்டும் செக்கச் சிவந் தவை; அணியப்படுபவை; உவமைப் பொருளானவை; இலக்கிய வண்ணனை பெற்றவை. தளிர், 'அழல்ஏர் செயலை அம் தழை (அகம் : 188 : 11). எனத் தியின் செம்மையாகவும், 'அத்தச் (சிவந்த) செயலைத் துப்பு (பவளம்) உறழ் ஒண்டளிர்” (ஐங் : 273) - எனப் பவளச் சிவப்பாகவும் சொல்லப்பட்டது. 'ஊட்டி அன்ன ஒண்டளிர்ச் செயலை' (அகம்:68:5) -என இயற்கைச் சிவப்பு போதாதென்று மேலும் சிவப்பை ஊட்டியது போன்றது எனப்பட்டது. தளிர்போன்றே பூவும், 'rரிநிற நீள்பிண்டி இணர்'(திணை. நூ.63) "செந்தி ஒண்பூம் பிண்டி' (மது. கா : 701) -எனத் தீச்செம்மையாகக் கூறப்பட்டது. திருமங்கையாழ்வார் கற்பனை கூட்டி TF 15 31, 2 அகம் 8ே ே