பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25


சமணத்தை அடுத்துத் தோன்றிய புத்தமதத்தைக் கண்ட புத்த பெருமான் பூமேல் பொலிபவர். அவர் பிறந்தபோது கண்ட அசித முனிவர், . 'இக்குழந்தைமக்கட் கூட்டமாகிய பொற்ருமரைக் குளத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதாகிய ஒரே பூவாகும்’ . -எனப் புத்தர் பிறப்பையே பூவாகச் சிறப்பித் தார். இக்கருத்து அம்மதத்தின் மறைநூலாகிய திரிபிடகத்தில் காணப்படும் குறிப்பாகும். . - புத்தர் அருளிய அருளுரை நூல் தம்ம பதம் அந்நூலில் நான்காவது பகுதிக்குப் புட்ப வருக்கம் -'மலர் இயல்'- என்று பெயர் சூட்டினர். முதலில், & . "மலர்க்குவியலிலிருந்து ஒருவன் பலமாலைகளைத் தொடுக்கக் கூடும். அதைப்போல, அழியும் உடலைப் பெற்ற ஒருவன் அதனைக்கொண்டே பல அறங்களைச் செய்யவேண்டும்." -எனப் பூவைச் சான்ருக்கி அறவினையை வலியுறுத்தினார். பின்னர் வளர்ந்த புத்த மதக் கோட்பாட்டிலும் பூ ஒரு கருவியாக இடங்கொண்டது. - - 'நினைவு இல்லாமல் பழக்கத்தில் செய்யப்படும் வழிபாடும் பயன் தரும்' என்பது சமணர் கருத்து. இதனை மறுப்பவர் புத்தர். அதற்குப் பூவைக் கருவியாக்கி விளக்கினர். 'புத்த பீடிகையில் உள்ளுணர்வுடன் ஒரு மலரை இட்டால் அம்மலர் புத்தனை அடையும் எனத் தமது கோட்பாட்டைக் காட்டுவர். இதனை மணிமேகலைக் காப்பியம், 'சிந்தை இன்றியும் செய்வினை உறுமெனும் - வெந்திறல் நோன்பிகள் (சமணர்) விழுமம்(துன்பம்) கொள்ளவும் செய்வினை சிந்தை இன்றெனில் யாவதும் எய்தா தென்போர்க் கேது வாகவும் பயன்கெழு மாமலர் இட்டுக் காட்ட"க: -என்கின்றது. 47 தம். ப:புவ:10. 48 மணிமலர்வனம்.14:18,