பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/610

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
590


கோட்டுப் பூவாகிய செயலைப் பூ குறிஞ்சி நிலத்தில் இளவேனிற் பருவத்தில் மலர்ந்து, புறவிதழே அகவிதழாகச் செக்கச் சிவந்த நிறத்தில் செவியிற் சூடப்படும் மலராகும். அதன் தளிரும் மலர்போன்ற தகுதிபெற்றது. இச்செயலை, சுனையில் மலரும் நீலத்துடன் சேர்த்துப் பாடப்படும். நீலமலர் காதலனால் காதலியின் காதில் செருகப் படுதல் அன்புப் பழக்கம். செவியில் செருகப்படும் ஒற்றுமையால் இரண்டும் இணைத்துப் பேசப்படும். 'கனையெலாம் நீலம் மலரச் சினையெலாம் செயலை மலர' - என்றார் இளம்பெரு வழுதியார். மலரைப்போன்று தளிரும் நீலத்துடன் இணைக்கப் படும். வையையாற்றில் மகளிர் நீராடினர். நீராட் டத் தில் ஒப்பனைப் போட்டியும் நேர்ந்தது. ஒருத்தி நீல மலரைக் காதிற் செருகிக்கொண்டு மற்றொருத்தியின் முன்னே காட்சி தந்தாள் இவள் உடனே தனது காதில் செயலையின் சிவந்த தளிரைச் செருகி எழில் காட்டினாள். இதனைப் பாடும் நல்லந்துவனார் சாய்குழைப் பிண்டித் தளிர்காதில் தையினாள்; பாய்குழை நிலம் பகலாகத் தையினாள்’2 -எனச் செயலைத் தளிரின் செம்மை நிறம் நீலமலரில் எதிரொளித்து அதன் நீல நிறத்தையும் பகலவன் நிறம் போலச் சிவப்பாக்கிவிட்டதாகப் பாடினார். - ·. У. சமயப் பாங்கிலும் புராணப் போக்கிலும் செயலை பெற்ற இடம் நயமும் நகைப்பும் கொண்டது. சமணக் கடவுளாகிய அருகதேவன், பூமலி அசோகின் புனை நிழல்' அமர்ந்தவன். சமயத் துறையில் அசோக மரம் சமணத்தாரது உரிமையாகப் பேசப்படும். அருகதேவன் அமர்ந் திருக்கும் அசோகு மாலையாகவே பூக்கும் என்பர். அருகனது இருக்கையானதால் இம்மரத்தின் நிழல் நிலத்தில் விழாது என்ப தை இளங்கோவடிகளார், 'பிண்டிப் பொது நீங்கு. பொது நிழல்' என்றார். ஆனால் அவரே 1 பரி :15 : 30, 81. 8 நன் : 1. 3. பரி : 1.1 . 95, 96, - 4 சிலம்பு, 15 , 132