பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/611

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

591


'கோதைதாழ் பிண் டிப் கொழுநிழல்" என்றார். 'பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகன்' என்றார் நன்னூலார். எனவே நிழல் விழாது என்பது பொருந்தவில்லை. காமவேள்கொண்ட ஐந்து மலர்க்கணைகளில் அசோக மலர் ஒன்று. காமனால் எய்யப்பட்டால் "அசோகு துயர் செய்யும்' என்பர். ஐந்தில் இது கவர்ச்சி ஊட்டுவது என்பர் மலர்களின் மலர்ச்சிக்குச் சில இயற்கைக் கரணியங்கள் கூறப்படும். தாழை மலர் மின்னலுக்கு மலரும் என்று கண்டோம். கவிஞர்களது கற்பனை மரபுகள் சில உள. அசோக மரத்து ஊஞ்சலில் மீனாட்சியம்மை அமர்ந்து ஆடினார். தமது காலை அதன் அடிமரத்தில் உதைத்து உந்தி ஆடினார். - 'ஊசலை உதைத்தாடலும் ஒண்டளிர் அடிச்சுவடுறப்பெறும் அசோகு நறவு ஒழுகுமலர் பூத்துதிர்வது' - எனக் குமரகுருபரர் ‘மகளிர் உதைக்கு அசோகு மலரும்’ என்றார். மேகதூதத்தில் ஒரு தோழன் பேசினான்: 'எனது வீட்டிலுள்ள அசோகு என் காதலி இடது காலால் உதைத்தால் ஒழியப் பூக்காது. வாயில் உள்ள எச்சிற் கள்ளை உமிழ்ந்தால் அல்லாமல் மகிழ மரம் மலராது இப்படியொரு பட்டியல் உண்டு. இருந்தாலும் அசோகு உதைவாங்கித்தான் மலரவேண்டும் என்றில்லை. இனிய இளவேனிற் சூழலில் மலரும் மலர். - இம்மலர் செவியிற் செருகப்படும் மலர்' என்றும் தனக் கென ஒரு தகுதி பெற்ற மலர். ಖ64 : 11 : 8 - 8 மீ. பி. த . 98 : 1. 2 அறப்பarர சதகம் : 90 2.