பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594


மணி என்னும் அடைமொழி பெற்ற நீல் நிறப் பூக்களில் இம்முள்ளியும் ஒன்று. 'மணிப் பூ முண்டகம்' என்றும் ம்ோமலர்'2 என்றும் இலக்கியங்கள் பேசும். பருவ காலத்தில் முதல்வில் பூக்கும் இப் பூ ஒளிவிடும் மணிபோன்று ம்லரும் என்பதை நல்லூர் நத்தத்தனார், - x -. "கடுஞ்சூல் (முதற் சூல்) முண்டகம் கதிர்மணி கழா அலவும்" (கழலு மாறு பூக்கவும்).3 -எனப் பாடினார். இதுபோன்றே . . . . . 'மணிமருள் மலர முள்ளி' -எனப் பரணரும் பாடினார் இவ்வாறு இம்முள்ளிப் பூ நீல நிறங் கொண்டது. لدت இப்பூவின் முழுக்காட்சியில் நீல நிறம் பளிச்சிடும். இப் பூவின் காம்பு கொடுங்கால் மர்மலர்” என்றபடி வளைந்தது. இக்காம்பிலிருந்து இம்மலர் கழன்று விழும். அப்போது மலரின் அடிப்பகுதி மட்டும் வெண்மையாகத் தோற்றமளிப்பதை உக்கிரப் பெருவழுதி, . "... . . . .குவிதலை கழன்ற மீன்முள் அன்ன வெண்கர்ல் மாமலர்' 6 என்றார். இவ்வாறு பெருங்காற்றால் இம்மலர்கள் கழன்றுகழன்று உருண்டு வீழும்போது, - ... r. . > - 'நூலிற்கோத்த முத்துக்கள் அறுந்து வீழ்வதைப்போன்று காட்சி தரும்’ என்றார் உலோச்சனார். இங்கு “நூலறு முத்து'7 என்றது அறுந்து சிதறி விழும் செயலுக்குக் கூறப்பட்டவினையுவம மாயினும், பெருங்காற்றில் கழன்று வீழும் போது இம்மலரின் அடிப்பகுதியில் வெண்மைத் தோற்றம் வெளிப்படுவதால் முத்தின் வெண்மையும் காம்புத் தொடர்பில் கொள்ளலாம். - மேலே கண்டபடி இப்பூ குவிந்து குலையாகப் பூக்கும். ஒரு தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக, - நான் நாள்தோறும் முண்டகப் பூவுைக் கொய்வேன். - அவ்வாறு கொய்ய வரவில்லை என்றால் அன்னை என்னை இல்லத்தில் அடைத்து விட்டாள் என்று நீ அறியலாம். 8 -என்றாள். இதுகொண்டு இப்பூவை 1 நற் :191; 9. 2 குறுந்:51 : 1. 8 சிறுபாண் : 148 4 அகம் :286 ! பெரும்பாண் :215. அகம் : 26: 1, 2. ...; •. குறுந் : :2, 8. நற் : 191 s 9,